சிறீலங்காவின் நிலைமாற்றுக்கால நீதிப் பொறியமைவுகளை கண்காணிக்கும் Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)பன்னாட்டு நிபுணர்களை குழுவின் அறிக்கை சிறிலங்காவுக்கு நெருக்கடியினை ஏற்படுத்துமா என்ற எதிர்பார்ப்பு பலமட்டத்தில் எழுத்துள்ளது.
ஐ.நா மனித உரிமைச்சபையில நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வழங்கிய பதினெட்டு மாத அவகாசத்தில், சிறிலங்கா அரசாங்கம் ஒத்துக் கொண்டிருந்த விடயங்களின் நடைடைப்பாடுகளை இப்பன்னாட்டுக்குழு கண்காணிக்கின்றது.
வரும் பெப்ரவரி 27ம் நாள் தொடங்கவிருக்கின்ற ஐ.நா மனித உரிமைச்சபைக் கூட்டத் தொடரில் இக்காலக்கெடு நிறைவடைகின்றது.
இந்நிலையில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட இப்பன்னாட்டுக்குழுவின் அறிக்கை வெளிவரவிருக்கின்றது.
அனைத்துலக சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டு பல மட்டங்களில் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில், சிறிலங்கா அரச தரப்பும் தனது அறிக்கையினை ஐ.நாவில் சமர்ப்பிக்க இருக்கின்றது.
இந்நிலையில், Sri Lanka – Monitoring Accountability Panel (MAP)குழுவினால் இக்கூட்டத் தொடர் நடக்கும் வேளையில் வெளிவர இருக்கின்ற அறிக்கை, சிறிலங்காவுக்கு எத்தகைய நெருக்கடியினை ஏற்படுத்துமென்ற எதிர்பார்ப்பு பல மட்டங்களில் எழுந்துள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.