மாவீரர் நினைவு வாரம் ஆரம்பித்துள்ள நிலையில் வடக்கில் உணர்வுபூர்வமாக அதனை அனுஷ்டிப்பதற்காக மாவீரர் துயி லும் இல்லங்கள் தயாராகியுள்ளன. 2009 ஆம் யுத்தம் மௌனிக்கப்பட்ட பின்னரும் கூட வடக்கு கிழக்கு மக்களினால் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் வடக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்களில் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் நாளை 27 ஆம் திகதி மாலை 6.05 மணிக்கு பொதுச்சுடர் ஏற்றி மாவீரர்களை நினைவுகூர மக்கள் தயாராகிவருகின்றனர். மாவீரர்நாள் நினைவேந்தல் குழுவினர், பொது மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் ...
Read More »செய்திமுரசு
எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்!- சவேந்திரசில்வா
சிறிலங்கா இராணுவம் எந்தஎதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார். இலங்கை இராணுவம் மரபுசாரத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும் இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். 2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர் இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். இராணுவத்தின் அனைத்து ...
Read More »புலம்பெயர்ந்த பெண்! இன்று அவுஸ்திரேலியாவில் முக்கிய பிரபலம்!
அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதன்மை செயல் அலுவலர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து 200 டொலர்களுடன் புலம்பெயர்ந்த ஒரு இளம்பெண் என்றால் நம்ப முடிகிறதா? ஆம், Macquarie குழுமத்தின் முதன்மை செயல் அலுவலரான Shemara Wikramanayake (57), அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் பெண் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது. அவர் 2018/19 நிதியாண்டில் 18 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெற்றுள்ளார். வசதியாக வாழ்ந்த சூழலில், ஒரு நாள் 200 டொலர்களுடன் நாட்டை விட்டு புறப்பட ...
Read More »“கோத்தாபய மீது அழுத்தங்களைப் பிரயோகிப்போம்”!- சுமந்திரன்
வடக்கு கிழக்கு மக்கள் அச்சமான சூழலுக்குள் இருக்க வேண்டியதில்லை. புதிய ஜனாதிபதி பதவியேற்றவுடன் மக்களை பழிவாங்கும் போக்கிற்குச் செல்வார் என்று கூறமுடியாது. அதற்கு காலம் உள்ளது. அந்த இடைப்பட்ட காலத்தில் இந்தியாவினதும், ஏனைய சர்வதேச நாடுகளினதும் அழுத்தங்களை அவர் மீது பிரயோகிப்போம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். பிரத்தியேக செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனாதிபதித் தேர்தலில் வடகிழக்கு தமிழ்ப் பேசும் மக்களும், பெரும்பான்மை சிங்கள மக்களும் இருவேறு ...
Read More »அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பலி!
அவுஸ்திரேலியாவில் தாயின் கவனக்குறைவால் இரண்டு குழந்தைகள் பரிதாபமாக கார் வெப்பத்திற்கு பலியாகியுள்ளனர். அவுஸ்திரேலியாவை சேர்ந்த Kerri-Ann Conley (27) என்கிற தாய், நேற்றைய தினம் தன்னுடைய இரண்டு குழந்தைகளான டார்சி கான்லி (2) மற்றும் சோலி-ஆன்(1) ஆகியோரை 31 செல்சியஸ் வெப்ப நிலையில் காரில் மறந்துவிட்டு வீட்டிற்கு சென்று உறங்கிவிட்டார். நீண்ட நேர உறக்கத்திற்கு பின்னரே இரண்டு குழந்தைகளும் காரில் இருப்பது Conley-ன் நினைவுக்கு வந்துள்ளது. வேகமாக காருக்கு சென்ற அவர், இரண்டு குழந்தைகளும் சுயநினைவிழந்து கிடப்பதை பார்த்து ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு தகவல் கொடுத்துள்ளார். ...
Read More »இலங்கை தமிழர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும்!
இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய அழிவை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களை காப்பாற்ற உலக நாடுகள் முன்வர வேண்டும் என தமிழர் தேசிய முன்னணியின் தலைவரான பழநெடுமாறன் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுதொடர்பாக நாகப்பட்டினத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது… “விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டு விட்டதாக இலங்கை அரசு கூறியதை இந்திய அரசும் ஏற்றுக்கொண்டது. இந்நிலையில் சோனியா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த உயர் பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றதை கண்டிக்காமல், விடுதலைப் புலிகளால் சோனியாகாந்தி உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று மக்களவையில் திமுக உறுப்பினர் டி ஆர் பாலு ...
Read More »நல்லிணக்கம் தோன்ற இறைவனிடம் கையேந்துவோம்!
மன்னார் மாந்தை, திருக்கேதீஸ்வரம் வளைவு சம்பந்தமாக ஊடகங்கள் எதையும் வெளியிடலாம். இப் பிரச்சினையை ஒரு பெரும் பிரச்சினையென சித்தரித்து காட்டலாம். ஆனால் நாம் மதங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்ற சிந்தனையிலேயே செயல்பட்டு வருகின்றோம். எந்த பிரச்சினைகள் தோன்றினாலும் அவைகள் தீர்க்கப்பட்டு சமயங்களுக்கிடையே நல்லிணக்கம் மலர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றித்து இறைவனிடம் வேண்டுவோம் என மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்தார். மன்னார் மறைமாவட்டத்தில் வருடந்தோறும் நடைபெற்றுவரும் அருட்பணி திட்டமிடல் மாநாடு கடந்த 21ஆம் திகதி முதல் மூன்று ...
Read More »ஷானி அபேசேகர தன்னிச்சையாக செயற்பட்டுள்ளார்! – கோத்தாபய
குற்றவியல் விசாரணை திணைக்கள முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர தன்னிச்சையாக புலனாய்வு அதிகாரிகளையும் கடற்படையின் கட்டளை அதிகாரிகளையும் கைது செய்து சிறைகளில் அடைத்துள்ளார் என்று சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதி பெல்லன்வில தர்மரத்ன தேரருடனான சந்திப்பின் போதே சிறிலங்கா ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். ஷானி அபேசேகர அதிகாரிகளை கைது செய்து துன்புறுத்தி தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தூண்டியுள்ளார். ஷானி அபேசேகர இவ்வாறான கைதுகளை மேற்கொள்ளும் போது அரச சாரா நிறுவனங்கள் அவரை மனித உரிமைகள் காப்பாளராக பாராட்டியதுடன் ...
Read More »ஐ.தே.க. பிளவை நோக்கி நகர்கிறதா?
1994 ஆம் ஆண்டிலிருந்தே ஐக்கிய தேசியக் கட்சி பாரிய நெருக்கடிகளைச் சந்தித்து வருகின்றது. இடைப்பட்ட காலத்தில் இரண்டு தடவைகள் கட்சியை பலப்படுத்துவதற்கான சந்தர்ப்பம் ஐக்கிய தேசிய கட்சிக்கு கிடைத்தது. 2001 ஆம் ஆண்டு ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைத்தது. எனினும் மூன்று வருடங்களில் அந்த ஆட்சியை இழந்தது. அதேபோன்று 2015 ஆம் ஆண்டும் ஐக்கிய தேசியக் கட்சியிடம் ஆட்சி வந்தது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் அமைத்தாலும் அது ஐக்கிய தேசிய கட்சியின் பிரதான அதிகாரத்துடன் இருந்தது. எனினும் இக்காலப்பகுதியலும் ஐக்கிய ...
Read More »வாசுதேவவா? மைத்திரியா?
சிறிலங்கா ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கம் பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள நிலையில், புதிய சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்காரவை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அரசாங்கத்தின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிகிறது. கடந்த 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 14 இலட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற கோத்தாபய ராஜபக்ஷ, கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதியாகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். அதனைத் தொடர்ந்து, புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை அவர் நியமித்ததுடன், (15) வெள்ளிக்கிழமை 16 பேர் ...
Read More »