நல்லிணக்கம் தோன்ற இறைவனிடம் கையேந்துவோம்!

மன்னார் மாந்தை, திருக்­கே­தீஸ்­வரம் வளைவு சம்­பந்­த­மாக ஊட­கங்கள் எதையும் வெளி­யி­டலாம். இப் பிரச்­சி­னையை ஒரு பெரும் பிரச்­சி­னை­யென சித்­த­ரித்து காட்­டலாம். ஆனால் நாம் மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்டும் என்ற சிந்­த­னை­யி­லேயே செயல்­பட்டு வரு­கின்றோம். எந்த பிரச்­சி­னைகள் தோன்­றி­னாலும் அவைகள் தீர்க்­கப்­பட்டு சம­யங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் மலர வேண்டும் என நாம் அனை­வரும் ஒன்­றித்து இறை­வ­னிடம் வேண்­டுவோம் என மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண்டோ ஆண்­டகை தெரி­வித்தார்.

மன்னார் மறை­மா­வட்­டத்தில் வரு­டந்­தோறும் நடை­பெற்­று­வரும் அருட்­பணி திட்­ட­மிடல் மாநாடு கடந்த 21ஆம் திகதி முதல் மூன்று தினங்­க­ளாக மன்னார் மறை­மா­வட்­டத்தின் குடும்ப பொது­நி­லை­யி­னரின் அருட்­பணி மையத்தில் மாநாட்டுச் செய­லாளர் அருட்­பணி ப.பி.டெஸ்மன் குலாஸ் அடி­களார் தலை­மையில் இடம்­பெற்­றது.

இந்த மாநாட்டில் மன்னார், வவு­னியா நிர்­வா­கத்­துக்­குட்­பட்ட மன்னார் மறை­மா­வட்­டத்தின் 46 பங்­கு­க­ளி­லி­ருந்தும் அருட்­ப­ணி­யா­ளர்கள், துற­விகள், பங்­கு­களின் மேய்ப்­புப்­பணி சபை பிர­தி­நி­திகள் சுமார் இரு­நூறு பேர் இதில் கலந்து கொண்­டனர். மாநாட்­டுக்கு வள­வா­ள­ராக இந்­திய தமிழ்­நாட்டு இயேசு சபையைச் சேர்ந்த அருட்­ப­ணி­யாளர் ஜெறி அடி­களார் கலந்­து­கொண்டு சிறப்­பு­ரைகள் வழங்­கினார்.

மூன்று தினங்­களும் கலந்­து­கொண்ட மன்னார் ஆயர் இம்­மா­னுவேல் பெர்­னாண் டோ ஆண்­டகை, இறு­திநாள் மாநாட்டை முடித்­து­வைக்கும் நிகழ்வில் உரை­யாற்­று­கையில்,
எமது மன்னார் மறை­மா­வட்­டத்தில் கத்­தோ­லிக்க மக்கள் எந்த பங்கில் இருந்­தாலும் அவர்கள் துன்­பத்­துக்கு உள்­ளா­கும்­போது நாம் அனை­வரும் ஒன்­றித்து கைகொ­டுத்து உதவ வேண்டும்.

மாந்தை, திருக்­கே­தீஸ்­வரம் பிரச்­சினை விட­ய­மாக இங்கு பிரஸ்­தா­பிக்­கப்­பட்­டது.

அப்­ப­குதி மக்கள் பல துன்­பங்­க­ளுக்கு உள்­ளாகி இருக்கும் போது அவர்­களின் துன்­பத்தில் நாமும் அவர்­க­ளுடன் இரண்­ட­றக்­க­லக்க வேண்டும். ஊட­கங்கள் எதையும் வெளி­யி­டலாம். இப்பிரச்­சி­னையை ஒரு பெரும் பிரச்­சி­னை­யென சித்­த­ரித்து காட்­டலாம். ஆனால் நாம் மதங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் ஏற்­பட வேண்டும் என்ற சிந்­த­னை­யி­லேயே செயல்­பட்டு வரு­கின்றோம்.

இம் மாந்தை திருக்­கே­தீஸ்­வரம் வளைவு சம்­பந்­த­மாக நாங்கள் அருட்­ப­ணி­யா­ளர்கள் கொண்ட ஒரு குழு­வாகச் சென்று ஆறு முறை அவர்­களைச் சந்­தித்­துள்ளோம்.

இறு­தி­யாக இடம்­பெற்ற இந்த விடயம் தொடர்பில் நாங்கள் அவர்­க­ளுக்கு குறிப்­பிட்ட இட­மொன்றை காண்­பித்­த­வே­ளையில் தாங்கள் பிறகு வந்து தெரி­விக்­கின்றோம் என தெரி­வித்து சென்­றார்கள். அதன் பின்பு எவ்­வித பதிலும் எமக்கு அவர்கள் தெரி­விக்­க­வில்லை.

இருந்­த­போதும் நாங்கள் ஒரு நல்ல நிலைக்கு கொண்டு வரு­வ­தற்­காக தொடர்ந்து எங்கள் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்றோம்.

இவ் விடயம் தற்­பொ­ழுது நீதி­மன்­றத்தில் நிலு­வையில் இருக்­கின்­ற­போதும் சம­யங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்­கத்தை கவ­னத்தில் கொண்டு நாங்கள் சுமு­க­மாக தீர்ப்­ப­தி­லேயே எங்கள் கவ­னத்தை செலுத்தி வரு­கின்றோம்.
இப் பிரச்­சினை தீர்க்­கப்­பட்டு சம­யங்­க­ளுக்­கி­டையே நல்­லி­ணக்கம் மலர வேண்டும் என நாம் அனைவரும் ஒன்றித்து இறைவனிடம் வேண்டுவோம்.

இது இவ்வாறு இருக்க திருச்சபை சட்டத்தின்படி எமது மறைமாவட்டத்தில் அருட்பணி பேரவை ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

இதற்காக நாங்கள் பலவிதத்திலும் ஆலோ சனைகளை மேற்கொண்டு வருகின்றோம். இது புதிதானதொன்றல்ல. ஏற்கனவே இது அமைக்கப்பட்டதொன்றாகும்.