எந்த அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ள இராணுவம் தயார்!- சவேந்திரசில்வா

சிறிலங்கா  இராணுவம் எந்தஎதிர்கால அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்வதற்கான தயார் நிலையில் உள்ளது என இராணுவதளபதி தெரிவித்துள்ளார்.

இலங்கை இராணுவம் மரபுசாரத ஆபத்துக்களையும் ஏனைய ஆபத்துக்களையும்  இனம் கண்டுள்ளது இதன் காரணமாக தயார் நிலையில் உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2009 இல் யுத்தம் முடிவடைந்த பின்னர்  இராணுவம் தேசத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளிற்கும் நல்லிணக்க நடவடிக்கைகளிற்கும் தன்னை அர்ப்பணித்துள்ளது என சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவின் புதிய ஜனாதிபதியின் தொலைநோக்கிற்கு ஏற்ப இந்த நடவடிக்கைகளை  படையினரின் ஆதரவுடன் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

இராணுவத்தின் அனைத்து படையணியினர் மத்தியிலும் உயர்ந்த ஒழுக்க கட்டுப்பாட்டை பேணுவோம் தவறிழைப்பவர்களிற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு தயங்கமாட்டோம் எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.