அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதன்மை செயல் அலுவலர் ஒரு காலத்தில் இலங்கையிலிருந்து 200 டொலர்களுடன் புலம்பெயர்ந்த ஒரு இளம்பெண் என்றால் நம்ப முடிகிறதா?
ஆம், Macquarie குழுமத்தின் முதன்மை செயல் அலுவலரான Shemara Wikramanayake (57), அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் பெண் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை பெற்றுள்ளதாக நேற்று தகவல் வெளியானது.
அவர் 2018/19 நிதியாண்டில் 18 மில்லியன் டொலர்கள் ஊதியம் பெற்றுள்ளார். வசதியாக வாழ்ந்த சூழலில், ஒரு நாள் 200 டொலர்களுடன் நாட்டை விட்டு புறப்பட வேண்டிய சூழல் Shemaraவின் தந்தைக்கு. அப்போது Shemaraவுக்கு 14 வயதுஒரு காலத்தில் ஓஹோவென வாழ்ந்த மருத்துவரான Shemaraவின் தந்தையால், பிரித்தானியாவில் தாக்குப்பிடிக்க முடியாமல் 1975ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு புலம்பெயர்ந்தது Shemara குடும்பம்.
200 டொலர்களுடன் வாழ்வைத் துவங்கிய குடும்பம் படிப்படியாக முன்னேற, பிள்ளைகள் நன்றாக படித்தார்கள். நேற்று அவுஸ்திரேலியாவிலேயே அதிக ஊதியம் பெறும் முதல் முதன்மை செயல் அலுவலர் என்ற பெருமையை Shemara பெற்றுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த பெருமையைப் பெறும் முதல் பெண் என்ற புகழும் அவருக்கு கிடைத்துள்ளது. அவருடைய 18 மில்லியன் டொலர்கள் ஊதியம், அவருக்கு அடுத்து தலைமைப் பொறுப்பிலிருப்பவரைவிட 5 மில்லியன் டொலர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.