செய்திமுரசு

சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வா பிரதமர்!?

சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து ஆராய்ந்து வருகின்றார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஜனாதிபதிசெயலகத்திலிருந்து இந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கவேண்டும் என ஐக்கியதேசிய முன்னணி பிடிவாதம் பிடிப்பதால் ஜனாதிபதி மாற்று வழி குறித்து சிந்தித்து வருகின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன   இதன் காரணமாக சிறிசேன சமல்ராஜபக்ச அல்லது நிமால் சிறிபால டி சில்வாவை பிரதமராக நியமிப்பது குறித்து சிந்திக்கின்றார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் ...

Read More »

7 பேர் கொண்ட நீதியரசர்கள் முன்னிலையில் இன்று விசாரணை!

ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இன்று விசாரணைகள் இடம்பெறவுள்ளன. இதனை விசாரணை செய்யவென நியமிக்கப்பட்ட  எழுவர் கொண்ட நீதியரசர்கள் குழு  முன்னிலையில் இன்று முதல் விசாரணைகள் காலை ஆரம்பிக்கப்படவுள்ளன. ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட பூரண நீதியரசர்கள் குழு ஒன்றின் முன்னிலையில் இந்த வழக்குகளை விசாரிக்க வேண்டும் என பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட 11 அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தொடர்பிலான இடையீட்டு மனுதாரர்கள் முன்வைத்த நகர்த்தல் பத்திரம் ...

Read More »

கூட்டமைப்பின்ஆதரவு -பி.மாணிக்கவாசகம்

வரலாற்று காலம்தொட்டே இன ரீதியாகப் பிளவுபட்டுக் கிடந்த இலங்கையை ஆங்கிலேயர் தமது ஆட்சி முடிவின்போது ஒன்றிணைத்துவிட்டுச் சென்றிருந்தனர். ஆயினும், ஒரு தேசம் என்ற அடிப்படையில் நிலவழியாக ஒருங்கிணைக்கப்பட்ட இந்தத் தீவில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தையும், ஐக்கியத்தையும் நிரந்தரமாக நிலைத்திருக்கச் செய்வதற்கான அரசியல் வழிமுறையொன்றை அவர்கள் வகுத்திருக்கவில்லை. இலங்கைக்கு சுதந்திரத்தை அளித்த அவர்கள் விட்டுச் சென்ற அரசியலமைப்பு இன ரீதியான பிளவுகளை ஆழமாக்குவதற்கு வழி வகுத்திருந்தது. ஆங்கிலேயர்கள் நாட்டைவிட்டுச் சென்ற பின்னர், இலங்கையில் பௌத்தமத மயமாக்குவதற்கான அத்திவாரம் மிக ஆழமாகவும், உறுதியாகவும் இடப்பட்டது. பௌத்த மதத்தின் வழிநின்று ...

Read More »

என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள்

“என்னுடைய உருவப் பொம்மையை ஒருமுறையல்ல ஆயிரம் முறை எரியுங்கள் அதைப்பற்றி நான் கவலைப்பட மாட்டேன். ஆனால் தமிழ் மக்களின் நீண்ட கால கொள்கைகளை நீங்கள் சார்ந்த கட்சியுடன் சேர்த்து எரித்துவிடாதீர்கள் என்று தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்” என்று வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வவுனியா நகரசபையின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பல்துறை சேவையாளர்கள் விருது வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். முதலமைச்சரின் வவுனியா வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழ் அரசுக் கட்சியினரால் தமிழ் ...

Read More »

பிரான்ஸில் பதற்ற நிலை!

பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.   முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது. அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.

Read More »

மன்னார் மனிதப் புதைகுழியில் பல எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன!

மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக -மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது. இந்தநிலையில் தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் ...

Read More »

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்!

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா இந்த விடயத்தை நேற்று அறிவித்துள்ளது. இந்த அறிவித்தலை விடுக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது. இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை “தன்னார்வலர்” திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ...

Read More »

மாவீரர் நாள் – 2018

கொழும்பில் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களால் இம்முறை மாவீரர் நாளுக்கு இடைஞ்சல் ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. கோப்பாயிலும் ஊர்காவற்துறையிலும் மாவீரர் நாள் ஏற்பாடுகளுக்கு எதிராக பொலீசார் நீதி மன்றத்தில் இரண்டு முறைப்பாடுகளைச் செய்தார்கள். பருத்தித்துறையில் பொலீசார் வணக்க நிகழ்வுகளைத் தடுக்க முற்பட்டார்கள். கிழக்கில் நடப்பட்ட நினைவுக்கற்களைப் பிடுங்கினார்கள். ராஜபக்சக்கள் மறுபடியும் ஆட்சிக்கு வரலாம் வெள்ளை வான்கள் மறுபடியும் வீதிக்கு வரலாம் என்றவாறாக ஊடகங்கள் மேலெழுந்த ஒருவித அச்ச சூழலில் மாவீரர் நாள் முன்னைய ஆண்டை போல இவ்வாண்டும் அனுஷ்டிக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்தன. நாட்டின் முழுக்கவனமும் ...

Read More »

பொட்டு அம்மான் உயிருடன் இல்லையாம்!- மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

விடுதலைப்புலிகளின் புலனாய்வுத் துறையின் பொறுப்பாளர் பொட்டு அம்மான் உயிருடன் இல்லை என்று மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பொட்டம்மான் உயிருடன் உள்ளார் என்றும் அவர் தற்போது நோர்வே நாட்டில் இருப்பதாகவும்   விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதுகுறித்து மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன கூறிய தகவல் இதோ; இந்த நிலையில் கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதம் இலங்கையின் இறுதிப் போர் இறுதிக்கட்டத்திற்கு வந்தது. இதன்போது புலிகள் இயக்கத்தின் தலைவர்கள் அனைவரும் கொல்லப்பட்டனர். ...

Read More »

ரணிலுடன் இணைந்து பணியாற்ற மாட்டேன்! – மைத்திரிபால சிறிசேன

நாடு தற்போது எதிர்கொண்டுள்ள அரசியல் நெருக்கடிகளிற்கு டிசம்பர் 31 ம் திகதிக்குள்  தீர்வை காணமுடியாவிட்டால் பொதுத்தேர்தலிற்கு செல்வதே ஒரே வழி என சிறிலங்கா  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிலோன் டுடேயிற்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார் பொதுத்தேர்தலிற்கு செல்வதே உரிய தீர்வாக அமையமுடியும் என அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் இடம்பெற்றால் மக்கள் கடந்தகாலங்களில் இடம்பெற்றவைகள் மீள இடம்பெறாத நிலையை ஏற்படுத்த முடியும் என குறிப்பிட்டுள்ள சிறிசேன மக்கள் தங்கள் வாக்களி;ப்பின் மூலம் ஊழல்வாதிகள் மீண்டும் தெரிவு செய்யப்படாத நிலையை உறுதி செய்ய ...

Read More »