பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம்!

பெற்றோர்களற்ற குழந்தைகளை கடத்துவது என்பது நவீனகால அடிமைத்தனம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியா இந்த விடயத்தை நேற்று அறிவித்துள்ளது.

இந்த அறிவித்தலை விடுக்கும் உலகின் முதல் நாடு என்ற பெயரையும் அவுஸ்திரேலியா பெற்றுள்ளது.

இந்தச் சட்டம், அவுஸ்திரேலியர்களை “தன்னார்வலர்” திட்டங்களில் பங்கு கொள்வதை தடுப்பதற்கான ஒரு பரந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.

ஏனெனில், இது குழந்தைகளுக்கு உதவுவதற்கு மாறாக தீங்கு விளைவிப்பதே அதிகளவில் இடம்பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் ஆதரவற்றோர் இல்லங்களில் வாழும் 80 சதவீத குழந்தைகளுக்கு தாய் அல்லது தந்தை என எவரோ ஒருவராவது உயிருடன் உள்ளதாக மதிப்பீடு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.