பிரான்ஸில் பதற்ற நிலை!

பிரான்ஸில் பல இடங்களில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

முகமூடி அணிந்த குழுவொன்று பல இடங்களில் கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை கருத்திற் கொண்டே அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி பாரீஸ் நகரில் நேற்று பல இடங்களில் கலவரம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பு, கலவர சம்பவங்களில் ஈடுபட்டவர்களை அமைதி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது.