மன்னார் மனிதப் புதைகுழியில் இருந்து தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு, மேலும் பல எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை (3) 109 ஆவது நாளாக -மன்னார் நீதவான் ரி.சரவணராஜாவின் மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
இந்தநிலையில் தற்போது வரை 239 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளதோடு மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அகழ்வு பணிகள் இடம் பெற்று வரும் நிலப்பகுதி விஸ்தரிக்கப்பட்டுள்ள நிலையில், விஸ்தரிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் காணப்படுவதை அவதானிக்கக்கூடியாதாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அகழ்வு இடம் பெறும் இடத்தில் தேங்கி இருந்த மழை நீர் வெளியேற்றப்பட்டு தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.