சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தேசிய கீதமானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கடந்த ஆட்சியின்போது பாடப்பட்டு வந்தது. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கமானது ஏன் இவ்வாறு இன நல்லுறவை முறிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அத்தோடு இந்த ...
Read More »செய்திமுரசு
ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!
அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர். மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர். பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ் தன்னுடைய வணிக ...
Read More »இலவச வீசா முறையை மேலும் ஒரு மாதம் நீடிக்க நடவடிக்கை!
இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ...
Read More »உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது!
மக்களை குணப்படுத்த வேண்டும் என எண்ணிய மருத்துவர் சயத் மிர்வாஸ் ரோஹனியால் உடைந்த போன மனிதராக அகதியாகவே உயிரிழக்க நேரிட்டது. தாலிபான் பிடியிலிருந்த ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து தப்பி வந்த இந்த இளம் ஆப்கானிய மருத்துவர், ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முறையில் சிக்கி தனது 32 வயதில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் தற்கொலை செய்து கொண்டார். ரோஹனி மரணம் தொடர்பான விசாரணை மிகவும் ஆரம்ப கட்டங்களிலேயே உள்ள நிலையில், இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார் இக்குடும்ப வழக்கறிஞரான ...
Read More »மூன்றில் இரண்டு சாத்தியமா..?
பாராளுமன்றத் தேர்தல் என்பது குறித்த பிரதேசத்தின் ஆளுமைகளையும் ஆட்சியாளனையும் தீரமானிக்கும் வித்தியாசமான செயற்பாடாகும். அதிலும் விகிதாசார தேர்தல் முறையின் கீழ் பெறப்படும் பெறுமானங்கள் சற்றும் வித்தியாசமானதாகவே வகுக்கப்படுகின்றன. உதாரணமாக நான்கு தேர்தல் தொகுதிகள் கொண்ட ஒரு மாவட்டத்தில் ஒருவர் தேசியப்பட்டியல் ரீதியாகவும் தெரிவு செய்யப்படுகிறார். மாவட்டமொன்றில் மூன்று கட்சிகளுக்கு மேல் போட்டியிடுமாயின் விகிதாசார முறையில் தனியொரு கட்சி முழு ஆசனங்களுக்குரிய உறுப்பினர்களையும் தமதாக்கிக் கொள்வதென்பது சிக்கல் நிறைந்ததும் ஒவ்வாத ஒரு முயற்சியுமாகும். எதிர்வரும் ஏப்ரலில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொதுத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை ...
Read More »செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும்!
செயற்கை விழித்திரை மூலம் கண் பார்வை பெற முடியும் என்று விஞ்ஞானிகள் தகவல் தெரிவித்துள்ளனர். கண்களின் விழித்திரையில் ஒளி அடுக்குகள் பாதிக்கப்பட்டு பாதி அளவில் கண் பார்வை இழப்புகள் ஏற்படுகின்றன. இது சர்வதேச அளவில் ஆண்டு தோறும் லட்சக்கணக்கானவர்களை பாதிக்கிறது. இதை சரி செய்யும் ஆய்வில் அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தை சேர்ந்த நிபுணர்கள் ஈடுபட்டிருந்தனர். தற்போது அவர்கள் செயற்கை விழித்திரையை உருவாக்கி அதன் மூலம் இழந்த கண் பார்வையை பெற முடியும் என கண்டுபிடித்துள்ளனர். செயற்கை விழித்திரையில் உள்ள மிக சிறிய மின் ...
Read More »ஆஸ்திரேலியாவின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான பீட்டர் சிடில் 35 வயதில் ஓய்வு
மெல்போர்ன் டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக பீட்டர் சிடில் அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியா அணியின் வேகப்பந்து வீச்சாளர் பீட்டில் சிடில். 35 வயதான இவர் நியூசிலாந்துக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளார். 2008-ம் ஆண்டு சர்வதேச போட்டியில் அறிமுகம் ஆன பீட்டர் சிடில் 67 டெஸ்டில் விளையாடி 221 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் ...
Read More »சட்டவாட்சி மீதான குற்றச்சாட்டு!
வெளிநாட்டுத் தூதரகத்தின் பணியாளராகிய ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகள் நாட்டின் நியாயமான சட்ட நடவடிக்கைகளாக சர்வதேச மட்டத்தில் நாட்டின் பெயரைக் காப்பதாக அமையவில்லை என்ற தொனியிலேயே இந்த விவகாரத்தில் சுவிற்சர்லாந்து அரசாங்கம் கருத்து வெளியிட்டுள்ளது. தனது தூதரக அதிகாரி ஒருவர் மீது தெளிவற்ற முறையில் சட்டம் பாய்ந்திருப்பதாகவும், தூதரகம் என்ற அந்தஸ்தில் அதன் பணியாளர்களுக்கு இருக்க வேண்டிய பாதுகாப்பு உரிமைகள் போதிய அளவில் நிலைநாட்டப்படவில்லை என்ற சாரத்திலேயே சுவிற்சர்லாந்து அரசின் நிலைப்பாடு வெளிப்பட்டிருப்பதாகத் தெரிகின்றது. சட்டவாட்சி சீராக நடைபெற வேண்டும். அதன் சர்வதேச ...
Read More »அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க வீதியில் இறங்கிய கோலா கரடி!
அவுஸ்திரேலியாவில் தாகத்தை தணிக்க கோலா கரடி ஒன்று வீதியில் இறங்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவுஸ்திரேலியாவின் அடிலெய்ட் மலைகளில் ஏற்பட்ட காட்டுத் தீ, சுமார் 25,000 ஹெக்டேர் மரங்களை சாம்பலாக்கியுள்ளது. இதன் காரணமாக, அடிலெய்ட் பகுதிகளில் தற்போது கடுமையான வெப்பச் சுழல் நிலவுகிறது. கடும் வெப்பம் காரணமாக, காட்டில் உள்ள கோலா கரடிகள் தண்ணீருக்காக அலையும் சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. இப்படி வரும் கோலா கரடியைப் பலரும் அரவணைத்து தண்ணீர் வழங்கி வருகிறார்கள். ஜேன் ப்ரிஸ்டர் என்னும் விலங்கு நல ஆர்வலர், காட்டுத்தீ சம்பவத்தின்போது, தன் ...
Read More »பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க முயல்கின்றது இந்த அரசு !
பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு முயல்வதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாட கூடாது என தெரிவித்துள்ளமையானது கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர். இதற்காக தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸலிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது. இந்த ...
Read More »