ஆபத்தான காட்டு தீயில் சிக்கியது அவுஸ்திரேலிய நகரம்!

அவுஸ்திரேலியாவின் விக்டோரியவின் மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தான காட்டு தீயின் பிடியில் சிக்குண்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரை சேர்ந்த  ஆயிரக்கணக்கான மக்கள் கடற்கரையில்தஞ்சமடைந்துள்ளனர்.

மலகூட்டா நகரம் மிகவும் ஆபத்தானகாட்டு தீயில் சிக்குண்டுள்ளதுடன் அந்த நகரத்திலிருந்து வெளியேறுவதற்கான பாதையும் துண்டிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நகரின் மக்களும் சுற்றுலாப்பயணிகளும்கடற்கரையில் தஞ்சமடைந்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

பெருமளவு மக்கள் வணிக வளாகங்கள்மற்றும் உடற்பயிற்சி நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலகூட்டாவின் வணிகவளாகத்தின் உரிமையாளரான ரொபேர்ட் பிலிப்ஸ்  தன்னுடைய வணிக வளாகத்தில் 45 பேர் தஞ்சமடைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.

அனைத்து பகுதிகளிலும் தீயைகாணமுடிகின்றது,முக்கிய வீதியில் தீயை காணமுடிகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பல குழந்தைகள்சுவாசிக்கமுடியாமல் அவஸ்தைப்படுகின்றனர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மலகுட்டாவில் இன்னமும் எஞ்சியுள்ள மக்கள் சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள படங்கள் கடுமையான சிவப்பு நிறத்தில்  புகை மண்டலம் நிரம்பிய வானத்தினை காண்பித்துள்ளன.

நகரின் மிகவும் பிரபலமானகடற்கரைபகுதியில் பெருமளவு மக்கள் காணப்படுவதையும் இந்த படங்கள் காண்பித்துள்ளன.

சிலர் முகக்கவசங்களை அணிந்துள்ளதை இந்த படங்களில் காணமுடிகின்றது.

சுமார் 4000ற்கும் மேற்பட்ட  மக்கள் கடற்கரையில் தஞ்சம்புகுந்துள்ளனர் என விக்டோரியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னர் ஒருபோதும் இல்லாத ஆபத்தும் மக்கள் வெளியேற்றமும் காணப்படுவதாக தெரிவித்துள்ள ஓய்வு பெற்றகாவல்துறை அதிகாரியொருவர் பாரியகாஸ் சிலிண்டர்கள் வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தெரிவித்துள்ளார்.

வீட்டிலிருந்த காஸ் சிலின்டர்களே வெடித்திருக்கலாம் இது நல்ல விடயமல்லஎன அவர் தெரிவித்துள்ளார்.

மக்களை வெளியேறுமாறு அறிவிப்பு வெளியாகியவண்ணமுள்ளது,அபாய அறிவிப்பும் வெளியாகின்றது என உள்ளுர் வானொலி அறிவிப்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மிகவும்பயங்கரமானநிலை காணப்படுகின்றது,கடும் காற்று வீசுகின்றது,நாங்கள் சிகப்பு நிற வானத்தினால் சூழப்பட்டுள்ளோம், மோசமான புழுதியும் புகையும்  நெருப்பும் நகரத்தின் மீது விழுந்துகொண்டிருக்கின்றன நாங்கள் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.