இலவச வீசா நடைமுறையானது அடுத்த ஆண்டு காலவதியாகவுள்ளமையினால் அதனை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது தொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளது. அமைச்சரவைப் பத்திரமொன்றை சமர்ப்பித்து மேலும் ஒருமாதகாலத்தால் குறித்த வீசா நடைமுறையை தொடர எதிர்பார்க்கின்றோம். அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் இவ்விடயம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாத் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கும், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்படி கடந்த அரசாங்கத்தினால் இதன் ஒரு கட்டமாக இலங்கைக்கு வீசா பெறும்போது அறவிடப்படும் கட்டாய வீசாக் கட்டணமான 35 அமெரிக்க டொலரிலிருந்து 48 நாடுகளுக்கு விலக்களிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.