சிங்கள மொழியில் மட்டும் தேசிய கீதம் பாட வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கை ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
அத்துடன், அரசாங்கம் பழிவாங்கும் செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுவருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக தேசிய கீதமானது சிங்கள மொழியிலும் தமிழ் மொழியிலும் கடந்த ஆட்சியின்போது பாடப்பட்டு வந்தது. எனினும் தற்போது ஆட்சியில் உள்ள இந்த அரசாங்கமானது ஏன் இவ்வாறு இன நல்லுறவை முறிக்கும் செயற்பாட்டில் ஈடுபடுகிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்தோடு இந்த அரசாங்கமானது பழிவாங்கும் செயற்பாடுகளில்தான் ஈடுபட்டு வருகின்றது. அதிலும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட சம்பிக்க ரணவக்க குறித்த வழக்கு விசாரணையிலிருந்து விடுவித்த பின்னர் மீண்டும் அவரது வழக்கு தூசு தட்டப்பட்டு மீண்டும் நீதிமன்றத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே புதிய அரசாங்கமானது இவ்வாறான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றார்.
Eelamurasu Australia Online News Portal