பௌத்த சிங்கள அரசாக தம்மை காண்பிக்க இந்த அரசு முயல்வதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற தமிழ் அரசுக் கட்சியின் 70வது ஆண்டு நிறைவு விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய கீதத்தினை தமிழ் மொழியில் பாட கூடாது என தெரிவித்துள்ளமையானது கவலை அளிக்கின்றது. இவ்விடயத்தில் பலரும் கவலை அடைந்துள்ளனர்.
இதற்காக தமிழ் மக்களும், தமிழ் பேசும் முஸலிம் மக்களும், மலையக மக்களும் ஒன்றாக அணி திரள வேண்டிய நிலை காணப்படுகின்றது.
இந்த விடயமானது புதிதல்ல. தனி சிங்கள சட்டம் கொண்டு வரப்பட்டபோது நாம் எதிர்த்திருந்தோம். அவ்வாறான நிலையே இன்று தோற்றுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.