செய்திமுரசு

சத்தியாகிரகப் போராட்டத்தை புறக்கணித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் வவுனியாவில் நேற்று இடம்பெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் புறக்கணித்துள்ளனர். நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் 12 பேர் தம்மை விடுவிக்குமாறும், தம்மீதான வழக்குகளை துரிதப்படுத்துமாறும் கோரி உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியா மாவட்ட பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகம் அருகாமையில் காலை 7 மணிமுதல் 5 மணிவரை சத்தியாகிரகப் போராட்டம் ஒன்று இடம்பெற்றது. இப்போராட்டத்தில் அரசியல் கைதிகளின் நிலையினை ...

Read More »

கடவுச்சொற்களை கொடுத்தே ஆகவேண்டும்!

அவுஸ்திரேலியாவில் தனிப்பட்டவர்களின் கணனிகள், கைத்தொலைபேசிகளின் கடவுச்சொற்களை விசாரணைகளின் போது கொடுக்கப்பட வேண்டுமென்ற சட்டம் அறிமுகமாகவுள்ளது. விசாரணையின் போது வெளிப்படுத்தாவிட்டால் ஐந்து வருட சிறை மற்றும் 60000 டொலர்கள் வரை அபராதம் விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் (Peter Dutton) கொண்டுவந்திருக்கும் இந்த சட்டமூலம் மூன்று வாசிப்புக்களின் ஊடாக நிறைவேற்ற வேண்டியதாக உள்ளது. தற்போது இரண்டாவது வாசிப்பு நடைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டிய தரப்பினருக்கு தெரியாமல் இரகசியமான குற்றங்களை இழைப்பவர்களிடம் விசாரணைகளை முன்னெடுக்கும் போது அவர்கள் ஒத்துழைக்காவிடின் ...

Read More »

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற தியாகதீபம் கலைமாலைநிகழ்வு 2018

பாரததேசத்திடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீர்கூட அருந்தாது பன்னிருநாட்கள் சாகும்வரை உண்ணாநோன்பிருந்து, ஈகைச்சாவைத் தழுவிக்கொண்ட தியாகதீபம் லெப் கேணல திலீபன் அவர்களின் 31 வது ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் சென்யூட்ஸ் மண்டபத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டது. கடந்த 28 – 09 – 2018 வெள்ளிக்கிழமையன்று மாலை 6.00 மணிக்கு செல்வி லக்சிதா தலைமையில் ஆரம்பமான இந்நிகழ்வில், அவுஸ்திரேலிய தேசியக்கொடியை மில்பார்க் தமிழ்ப்பள்ளி அதிபர் திரு சந்திரகுமார் அவர்கள் ஏற்றிவைக்க, தமிழீழ தேசியக்கொடியை விக்ரோறியா மாநில தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளர் ...

Read More »

மாலைதீவின் தேர்தல் முடிவு நமக்குச் சொல்லும் செய்தி என்ன?

மாலைதீவின் தேர்தல் முடிவு உலக ஊடகங்களில் அதிக கவனத்தை பெற்றிருக்கின்றது. கடந்த சில வருடங்களாக மாலைதீவிற்கும் இந்தியாவிற்கும் இடையில் கடுமையான விரிசல்கள் ஏற்பட்டிருந்தன. இதன் உச்சமாக இந்தியாவினால் வழங்கப்பட்ட இரண்டு உலங்கு வானூர்திகளை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறு மாலைதீவு நிர்வாகம் பணித்திருந்தது. மாலைதீவில் தங்கியிருந்த இந்தியாவின் 26 விமானப்படை அதிகாரிகளுக்கான கடவுச் சீட்டை இரத்துச் செய்தது. அத்துடன் மாலைதீவில் பணியாற்றிக் கொண்டிருந்த 2000 இந்திய பணியாளர்களுக்கான வேலை அனுமதிப்பத்திரத்தை இரத்துச் செய்தது. வழமையாக இந்தியர்களால் விண்ணப்பிக்கப்பட்டு, பெறப்படும் மாலைதீவின் விளம்பர நிறுவனங்களுக்கு இந்தியர்கள் விண்ணப்பிக்க ...

Read More »

இந்தோனேசியாவில் இயற்கை பேரழிவு! – 1000 க்கு மேல் உயிரிழந்தனர்!

இந்தோனேசியாவில் சுனாமி தாக்குதலுக்குள்ளான சுலாவெசி மாகாணத்தில் மட்டும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000-ஐ தாண்டி விட்டது. இந்தோனேசியாவில் சுலாவெசி மாகாணத்தில் கடந்த 27-ந்திகதி சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதை தொடர்ந்து பலு என்ற கடற்கரை நகரத்தை சுனாமி பேரலைகள் தாக்கி துவம்சம் செய்தன. பலு நகரில் நடைபெற்ற கடற்கரை திருவிழாவில் பங்கேற்க ஏராளமான மக்கள் திரண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் சிக்கி உயிரிழந்தனர். கடற்கரையில் கூடியிருந்தவர்களை ஆழிப் பேரலைகள் சுருட்டியதால் அதில் உயிரிழந்தவர்களின் பிணங்கள் தெருவெங்கும் சிதறி கிடந்தன. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது. ...

Read More »

எதிர்­கால அச்­சு­றுத்­தல்­களில் இருந்து ஊடகங்களை எவ்­வாறு பாது­காத்தல் ?

ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்­கான நட­வ­டிக்­கைகள் தொடர்­பான பிர­க­டனம் நேற்று கைச்­சாத்­தி­டப்­பட்­டது. ஊடக சுதந்­தி­ரமும் சமூகப் பொறுப்பும் பற்­றிய கொழும்பு பிர­க­ட­னத்தின் 20 ஆவது வருடப் பூர்த்தி நிகழ்­வுகள் கடந்த வியா­ழக்­கி­ழமை சினமன் கிராண்ட் ஹோட்­டலில் ஆரம்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன. யுனெஸ்கோ நிறு­வ­னத்தின் நிதி உத­வியில் இலங்கை பத்­தி­ரிகை ஸ்தாப­னத்தின் ஏற்­பாட்டில் பத்­தி­ரிகை ஆசி­ரியர் சங்கம், சுதந்­திர ஊடக இயக்கம், உழைக்கும் பத்­தி­ரி­கை­யாளர் சங்கம் ஆகியன இணைந்து கொழும்பில் நடத்­திய இந் நிகழ்வில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அமைச்­சர்கள், ...

Read More »

கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம்!

அபி­வி­ருத்தி வேலைத்­திட்­டங்கள் குறித்து பேசி காலத்தைக் கடத்­து­கின்­ற­னரே தவிர அபி­வி­ருத்­தியை எவ்­வாறு முன்­னெ­டுப்­பது என்ற தெளிவு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளிடம் இல்லை. எம்மைப் பழி­வாங்­க ­வேண்டும் என்ற ஒரே நோக்கம் மட்­டுமே நல்­லட்­சி­யா­ளர்­க­ளிடம் உள்­ளது என்று முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக்ஷ தெரி­வித்தார். மீண்டும் எமது ஆட்­சியில் ஜன­நா­ய­கத்தை மக்கள் உண­ரு­வார்கள். கடந்த காலங்­களில் விட்ட தவ­று­களை மீண்டு இழைக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார். எலிய அமைப்பின் மாநாடு நேற்று கடு­வல பிர­தே­சத்தில் இடம்­பெற்­றது. இதில் கலந்­து­கொண்டு உரை­யாற்றும் போதே முன்னாள் பாது­காப்பு ...

Read More »

அவுஸ்திரேலியாவில் பிரபல இசைக் கலைஞர் ரொனி லீச்ட் காலமானார்!

சிறிலங்காவின் பிரபல்யப் பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர். இசை நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக அவுஸ்திரேலியா சென்றிருந்தபோது அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது. சிறிலங்காவின் ( சிங்கள மொழி) பிரபல பாடகரும், நடிகருமான ரொனி லீச்ட் தனது 65 வயதில் அவுஸ்திரேலியாவில் இன்று காலமானர்.

Read More »

விபத்தில் கார்பிணி பெண் மரணம்! கணவர் கோமா நிலையில்!

அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிக்கிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவரது கணவர் கோமா நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். கேத்ரீன் (வயது 23) என்ற பெண்ணுக்கும் பிரான்சோ (வயது 25) என்ற இளைஞருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடந்த நிலையில் இரட்டை குழந்தைகளை வயிற்றில் சுமந்து கேத்ரீன் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் நேற்று இரவு கேத்ரீனும், பிரான்சோவும் சிட்னியில் உள்ள Orchard Hills பகுதியில் காரில் சென்று கொண்டிருந்த போது காரை பெண் ஓட்டுனர் ஓட்டினார். அப்போது எதிரில் வந்த கார் ஒன்று இவர்கள் பயணித்த ...

Read More »

ஜின்னா, எர்டோகன், இம்ரான் கான் மட்டுமே தலைவர்கள்!

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை போன்ற எளிமையான நபரை தான் பார்த்தது இல்லை எனவும், அவரை போன்ற தலைவர் கிடைத்ததால் பாகிஸ்தானியர்கள் அதிர்ஷ்டசாலிகள் எனவும் அவரது மனைவி புஷ்ரா கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முதல் பெண்மணியான பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா கான் ஒரு சூபி மத குரு ஆவார். அந்நாட்டின் தொலைக்காட்சி ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த அவர், பாகிஸ்தானின் விதியை மாற்ற நினைத்த கடவுள் அரசியல்வாதிக்கு பதிலாக உண்மையான தலைவர் ஒருவரை நாட்டுக்கு வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மேலும், மத குரு எனும் ...

Read More »