இணையத்தில் வரைபடம் என்றதும் கூகுள் வரைபடம்தான் நினைவுக்கு வரும். கூகுள் வரைபடம் தவிர மேலும் பல வரைபட சேவைகள் இருக்கின்றன. அவற்றில் ஒன்று சைஜிக் டிராவல் மேப்ஸ். பயணிகளுக்குத் தேவையான தங்குமிடங்கள், முக்கிய இடங்கள், ஹோட்டல்கள், சுற்றுலா தலங்கள் ஆகியவற்றைக் கச்சிதமாக அடையாளம் காட்டுகிறது. இந்தத் தளத்தின் மூலம் கூடுதலான தகவல்களையும் தெரிந்துகொள்ளலாம். தேவையெனில் இதன் மூலமே பயணங்களைத் திட்டமிடலாம். தேடல் வசதியும் இருக்கிறது. பயனாளிகளின் இருப்பிடத்தை உணர்ந்து தளத்தில் நுழைந்ததுமே அவர்களுடைய வசிப்பிடப் பகுதி வரைபடத்தில் முன்னிறுத்தப்படுவது சிறப்பு. ‘ஓபன் ஸ்டிரீட் மேப்’ ...
Read More »நுட்பமுரசு
பிளாஸ்டிக்கை மட்கச் செய்யும் பாக்டீரியா!
குப்பை மேடுகளிலும், நீர்நிலைகளிலும் பெருகி வரும் பிளாஸ்டிக் கழிவுகளை எப்படி சீக்கிரம் மட்கிப் போகச் செய்வது? இதுதான், 21ஆம் நுாற்றாண்டின் மிகப் பெரிய சுற்றுச்சூழல் சவால். இந்த சவாலுக்கு, பிரிட்டனைச் சேர்ந்த போர்ட்ஸ்மவுட் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், ஒரு விடையை கண்டு பிடித்துள்ளனர். கடந்த, 2016ம் ஆண்டு ஜப்பானில் உள்ள குப்பை மேடுகளில் ஒரு புதுமையான பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டது. அது தானாகவே பிளாஸ்டிக்கை சிதைத்து மட்கச் செய்யும் திறனை பெற்றிருந்தது. அந்த பாக்டீரியாவை பிரிட்டன் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர். ஒரு சோதனையின்போது, அந்த பாக்டீரியா சுரக்கும் ...
Read More »இன்ஸ்டாகிராமில் கேள்வி-பதில் வசதி!
ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் அண்மையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இசையைச் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேள்வி பதில் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது. இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர் மூலம் கேள்வி கேட்க அழைப்பு விடுத்து அதற்கான பதிலை அளிக்கலாம். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாடுவதற்கான சுவாரசியமான வழியாக இது அமையும் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடமும் கேள்வி கேட்டு விவாதத்தையும் தொடங்கலாம்.
Read More »ஐயன் மேன் ஜெட் சூட்!
ஹாலிவுட் திரைப்படத்தில் வருவதை போன்ற ஐயன் மேன் சூட் விற்பனைக்கு வந்திருக்கிறது. இதன் விலை மற்றும் விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். ஹாலிவுட் சினிமாவின் கற்பனை கதாபாத்திரமான ஐயன் மேன் மார்வெல் காமிக் புத்தகங்கள் மற்றும் பல்வேறு திரைப்படங்களின் மூலம் நம்மை மகிழ்வித்து வருகிறது. திரைப்படம் மற்றும் காமிக் புத்தகங்களின் படி பணக்கார வியாபாரி ஒருவர் அதிநவீன சூட் ஒன்றை உருவக்கி உலகம் எதிர்நோக்கும் ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்றும் வகையில் ஐயன் மேன் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கிறது. உலக பிரபலமாக இருக்கும் ஐயன் மேன் கதாபாத்திரத்தை ...
Read More »ஸ்மார்ட்போனில் அலட்சியம்!
ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், அவற்றைப் பாதுகாப்பதில் இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலை இருப்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உணர்த்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை வழங்கும் நிறுவனமான, கேஸ்பர்ஸ்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பாதிப் பேருக்கு மேல் அவற்றுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது. அதேபோல் பெரும்பாலானோர் திருட்டுத் தடுப்பு தீர்வுகளையும் நாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளது. ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை அணுகுவது பரவலாகி இருக்கும் நிலையில், இத்தகைய செயல் தரவுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் பயனாளிகளில் மிகவும் ...
Read More »இமெயிலில் இமோஜிகள் தேவையா?
மின்னஞ்சல் பயன்பாட்டுக்கெனத் தவிர்க்க முடியாத விதிகளும் எழுதப்படாத விதிகளும் நிறைய இருக்கின்றன. அதிலும் அலுவல்ரீதியான பரிவர்த்தனை எனில், மின்னஞ்சல் விதிகளைத் தவறாமல் பின்பற்றுவது நல்லது. மின்னஞ்சலில் கோபத்தை வெளிப்படுத்துவது, ஆச்சரியக்குறிகளை அதிகம் பயன்படுத்துவது, ஒற்றை வரியில் பதில் அளிப்பது, உள்ளடக்கத்துக்குப் பொருத்தமான தலைப்பிடாமல் இருப்பது, ‘ரிப்ளை ஆல்’ வசதி மூலம் எல்லோருக்கும் பதில் அளிப்பது உள்ளிட்டவை மின்னஞ்சல் பயன்பாட்டில் தவிர்க்க வேண்டிய தவறுகள். இதேபோல, இரண்டு இணைப்புகளுக்கு மேல் அனுப்புவது, தனியே குறிப்பு இல்லாமல் அளவில் பெரிய கோப்புகளை இணைப்பாக அனுப்புவதும் மின்னஞ்சல் தவறுகளே. ...
Read More »காளான் வடிவ எல்.ஈ.டி விளக்குடன் 5 யுஎஸ்பி சார்ஜர்!
காளான் வடிவத்தில் எல்.ஈ.டி விளக்குடன், ஒரே நேரத்தில் 5 சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி உடைய புதிய கருவியை ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது. ‘ZEB-5CSLU3’ என்று பெயரிடப்பட்டுள்ள இதுல் போர்ட் டாக்கிங் (port docking) ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க இது உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும். போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், உடனே சாதனத்தை இந்த 5 போர்ட் ...
Read More »ஐந்து கமரா கொண்டு உருவாகும் சாம்சங் ஸ்மார்ட்போன்!
சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேடு-ஆங்கிள் ...
Read More »கூகுளில் ரூ.1.2 கோடிக்கு வேலை.. மும்பை இளைஞரை தூக்கிச் சென்ற சுந்தர் பிச்சை !
கூகுள் நிறுவனத்தின், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மும்பையை சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்ற 22 வயது இளைஞர் தேர்வாகி உள்ளார். இவருக்கு வருடத்திற்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது. கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். உலகில் மிகவும் சக்தி வாய்ந்து தலைமை செயலதிகாரிகளில் இவரும் ஒருவர். அதேபோல் விண்டோஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக சத்யா நாதெல்லா செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற, இந்தியாவை சேர்ந்த இன்னொரு இளைஞரும் ...
Read More »வாட்ஸ்அப் – போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம்!
வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் குறித்த முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். வாட்ஸ்அப் செயலியில் போலி செய்திகள் அதிகளவு பரப்பப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, போலி செய்திகளை கண்டறியும் புதிய அம்சம் வாட்ஸ்அப் செயலியில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ்அப் சோதனை செய்யும் புதிய அம்சம் அதன் பயனர்களை போலி செய்திகள் குறித்து எச்சரிக்கை செய்யும். வாட்ஸ்அப் க்ரூப்களில் அதிகம் பரப்பப்படும் குறுந்தகவல்கள் போலியானதா என்பது குறித்து இந்த அம்சம் பயனர்களுக்கு எச்சரிக்கை செய்யும். ...
Read More »