சாம்சங் நிறுவன ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் அதிகபட்சம் ஐந்து கமராக்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த புதிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. அந்த வகையில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் சாம்சங் நிறுவனம் டூயல் செல்ஃபி கமரா வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.
கொரிய செய்தி நிறுவனம் இதுகுறித்து வெளியிட்டிருக்கும் தகவல்களில், புதிய ஸ்மார்ட்போனில் சாம்சங் நிறுவனம் மூன்று பிரைமரி கமராக்களை வழங்க இருப்பதாக தெரிவித்திருக்கிறது. இவற்றில் வேரியபிள் அப்ரேச்சர் சென்சார், சூப்பர் வேடு-ஆங்கிள் கமரா மற்றும் டெலிஃபோட்டோ லென்ஸ் உள்ளிட்டவை கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்9 பிளஸ் மாடலில் சாம்சங் 12 எம்பி வைடு-ஆங்கிள் கமரா, 12 எம்பி டெலிஃபோட்டோ கமரா வழங்கியிருக்கும் நிலையில், இந்த மாடலின் மேம்படுத்தப்பட்ட வெர்ஷனாக வெளியாக இருக்கும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் ஸ்மார்ட்போனில் இதேபோன்ற கேமரா அமைப்புடன் 16 எம்பி அல்ட்ரா-வைடு-ஆங்கில் கமரா வழங்கப்படும் என கூறப்படுகிறது.
கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் அல்ட்ரா-வைடு-ஆங்கிள் கமரா வழங்கப்படும் பட்சத்தில் இது 120- கோணம் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்கள் உண்மையாகும் பட்சத்தில் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடல் பியான்ட் 2 என்ற குறியீட்டு பெயர் கொண்டிருக்கும் என்றும் இது ஐந்து கமரா செட்டப் கொண்ட முதல் ஸ்மார்ட்போனாகவும் இருக்கும் கூறப்படுகிறது.
எனினும் டூயல் செல்ஃபி கமரா கொண்ட சாம்சங் நிறுவனத்தின் முதல் ஸ்மார்ட்போனாக இது இருக்காது. ஏற்கனவே சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி ஏ8 பிளஸ் மாடலில் அந்நிறுவனம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.9 அப்ரேச்சர், 8 எம்பி இரண்டாவது கேமரா, f/1.9 அப்ரேச்சர் வழங்கி இருக்கிறது. பின்புறம் 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.7 அப்ரேச்சர் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதுவரை கிடைத்திருக்கும் தகவல்களின் படி கேலக்ஸி எஸ்10 சீரிஸ் ஸ்மார்ட்போன் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா 2019-இல் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதேபோன்று கேலக்ஸி எஸ்10 மாடலில் 5.8 இன்ச் மற்றும் கேலக்ஸி எஸ்10 பிளஸ் மாடலில் 6.3 இன்ச் டிஸ்ப்ளே வழங்கப்படும் என்றும் இவற்றில் சாம்சங்-இன் எக்சைனோஸ் பிராசஸர் மற்றும் ஆன்ட்ராய்டு பி இயங்குதளம் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal