காளான் வடிவ எல்.ஈ.டி விளக்குடன் 5 யுஎஸ்பி சார்ஜர்!

காளான் வடிவத்தில் எல்.ஈ.டி விளக்குடன், ஒரே நேரத்தில் 5 சாதனங்களை சார்ஜ் செய்யும் வசதி உடைய புதிய கருவியை ஜெப்ரானிக்ஸ் அறிமுகம் செய்துள்ளது.

‘ZEB-5CSLU3’ என்று பெயரிடப்பட்டுள்ள இதுல் போர்ட் டாக்கிங் (port docking) ஸ்டேஷனில், ஒரே நேரத்தில் 5 சாதனங்களுக்கு சார்ஜ் செய்ய முடியும். சாதனங்களை அழகாக ஒழுங்குபடுத்தும் வகையில் இருக்க இது உதவுகிறது. காளான் வடிவ LED விளக்கு படுக்கை அறை விளக்கு போல எளிதாகத் தோற்றமளிக்கும்.

போன் அல்லது டேப்லெட்டில் பேட்டரி தீர்ந்துவிட்டால், உடனே சாதனத்தை இந்த 5 போர்ட் டாக்கிங் ஹப்பில் வைத்துவிட்டால் துரிதமாக சார்ஜ் ஏறத் துவங்கும்.

5 USB போர்ட்டுகளுடன் வரும் இந்த சார்ஜிங் டாக் துரிதமான சார்ஜிங்கிற்காக ஸ்மார்டர் IC உடன் வருகிறது. அவற்றில் 1-4 வரை 5v ஆதரவும் போர்ட் 5 துரித சார்ஜுக்கான 12v/9v/5v ஆதரவும் கொண்டது. இந்த டாக்கிங் ஸ்டேஷனின் அதிகபட்ச வெளியீடு 6A ஆகும்.

இதில் இருக்கும் பிரித்து எடுக்கக் கூடிய காளான் வடிய LED விளக்கை அதில் இருக்கும் ஆன்/ ஆஃப் சுவிட்சுகளைப் பயன்படுத்தி பயன்படுத்த முடியும். மேலும் இதில் அனைத்து மொபைல் மற்றும் டேப்லெட்டுகளை வைப்பதற்கான ஹோல்டரும் இருக்கிறது.

இதன் இந்திய விலை ரூ. 3,495