ஒளிப்பட பகிர்வு சேவையான இன்ஸ்டாகிராம் தளம் தொடர்ந்து புதிய அம்சங்களை அறிமுகம் செய்துவருகிறது. அந்த வரிசையில் அண்மையில், இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் இசையைச் சேர்க்கும் வசதியை அறிமுகம் செய்தது. இதன் தொடர்ச்சியாக தற்போது, கேள்வி பதில் வசதியை இன்ஸ்டாகிராம் அறிமுகம் செய்துள்ளது.
இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகளில் ஸ்டிக்கர் மூலம் கேள்வி கேட்க அழைப்பு விடுத்து அதற்கான பதிலை அளிக்கலாம். இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் உரையாடுவதற்கான சுவாரசியமான வழியாக இது அமையும் என இன்ஸ்டாகிராம் குறிப்பிட்டுள்ளது. இந்த வசதியின் மூலம் நண்பர்களிடமும் கேள்வி கேட்டு விவாதத்தையும் தொடங்கலாம்.
Eelamurasu Australia Online News Portal