ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்தாலும், அவற்றைப் பாதுகாப்பதில் இன்னும் விழிப்புணர்வு தேவை எனும் நிலை இருப்பதைச் சமீபத்திய ஆய்வு ஒன்று உணர்த்துகிறது. வைரஸ் தடுப்பு சேவை வழங்கும் நிறுவனமான, கேஸ்பர்ஸ்கை நிறுவனம் நடத்திய ஆய்வில் ஸ்மார்ட்போன் பயனாளிகளில் பாதிப் பேருக்கு மேல் அவற்றுக்கு பாஸ்வேர்டு பாதுகாப்பைப் பயன்படுத்துவதில்லை என்று தெரிவிக்கிறது.
அதேபோல் பெரும்பாலானோர் திருட்டுத் தடுப்பு தீர்வுகளையும் நாடுவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
ஸ்மார்ட்போன் மூலம் இணையத்தை அணுகுவது பரவலாகி இருக்கும் நிலையில், இத்தகைய செயல் தரவுகளின் பாதுகாப்பைக் கேள்விக்குள்ளாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன் பயனாளிகளில் மிகவும் குறைந்த சதவீதத்தினரே, தகவல்களை ‘பேக் அப்’ செய்யும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர் என்றும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.