கூகுள் நிறுவனத்தின், ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்ற மும்பையை சேர்ந்த ஆதித்யா பல்லிவால் என்ற 22 வயது இளைஞர் தேர்வாகி உள்ளார். இவருக்கு வருடத்திற்கு 1.2 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளது.
கூகுள் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை பணியாற்றி வருகிறார். உலகில் மிகவும் சக்தி வாய்ந்து தலைமை செயலதிகாரிகளில் இவரும் ஒருவர். அதேபோல் விண்டோஸ் நிறுவனத்தின் தலைமை செயலதிகாரியாக சத்யா நாதெல்லா செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் பணியாற்ற, இந்தியாவை சேர்ந்த இன்னொரு இளைஞரும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். என்ன வேலை கூகுள் முழுக்க முழுக்க, ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பம் எனப்படும், செயற்கை நுண்ணறிவு மூலமே இயங்கி வருகிறது.
இந்த நிலையில் ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் பல புதிய ஆராய்ச்சிகளை செய்ய கூகுள் நிறுவனம் முடிவெடுத்துள்ளது. இதற்காக உலகம் முழுக்க ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்பத்தில் நல்ல அறிவு கொண்ட நபர்களை கூகுள் தேடிக்கொண்டு இருந்தது.
தேர்வு எப்படி
இதற்காக இந்தியாவிலும், பெங்களூரில் தேர்வு ஒன்று நடந்தப்பட்டது. இதற்காக இந்தியாவில் இருந்து 6000 பேர் தேர்வெழுதினார்கள். அதேபோல் உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், மிகவும் அதிக ஆர்டிபிஷியல் இண்டலிஜென்ஸ் தொழில்நுட்ப அறிவு கொண்ட நபர்கள் இந்த தேர்வை எழுதினார்.
இதில் உலகத்தில் மொத்தம் 50 பேர் தேர்வாகி இருக்கிறார்கள்.
சம்பளம்
அந்த வகையில், தற்போது மும்பையில் பிறந்து, பெங்களூரில் வளர்ந்த ஆதித்யா பல்லிவால் கூகுளில் பணியாற்ற தேர்வாகி உள்ளார்.
இவருக்கு வெறும் 22 வயதுதான் ஆகிறது. இவருக்கு மாதம் 10 லட்சம் சம்பளம் என்று வருடத்திற்கு ரூபாய் .2 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்படும். இந்தியர்களை அதிக சம்பளம் வாங்கும் நபர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. கஷ்டமாக இதுகுறித்து பேட்டியளித்துள்ள ஆதித்யா, ”வரும் ஜூலை 16ம் திகதி நான் பணியில் சேர வேண்டும். இந்த வேலை எனக்கு கிடைத்ததில் எனக்கு பெரிய மகிழிச்சி.
எனக்கு என்னுடைய கல்லூரி ஆசிரியர்கள் அதிகம் உதவினார்கள்” என்றுள்ளார். இவர் பெங்களூரின் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் இன்பர்மேஷன் டெக்னலாஜி கல்லூரியில் படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal