தொலைந்து போனதாக கருத்தபட்ட இந்தியாவின் முதல் நிலவு ஆய்வு செயற்கைக் கோளான சந்திரயான்-1 விண்கலம் நிலவை சுற்றி வருவதை நாசா கண்டறிந்து உள்ளது. இந்திய விண்வெளித் துறையில் ஒரு கனவுத்திட்டம் சந்திரயான்-1. நிலவை ஆராய்வதற்கு சந்திரயான்-1 விண்கலம், 2008-ம் ஆண்டு, அக்டோபர் 22-ந் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்வெளியில் ஏவப்பட்டது. ஆனால் ஓராண்டுக்குள், அதாவது 2009-ம் ஆண்டு ஆகஸ்டு 29-ந் தேதி முதல் சந்திரயான்-1 விண்கலத்துடனான தொடர்பை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) இழந்து விட்டது. இந்த நிலையில், சந்திரயான்-1 தொலைந்து போகவில்லை, ...
Read More »நுட்பமுரசு
இந்த ஆண்டின் ஃபிளாக்ஷிப் ஆப்பிள் போன்: ஐபோன் எடிஷன்
2017 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஃபிளாக்ஷிப் போன், ஐபோன் எடிஷன் என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 ஐபோனில் ஏகப்பட்ட அம்சங்களில் புதுமையை புகுத்த இருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது. இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்“ என அழைக்கப்படலாம் என ...
Read More »வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் ‘ரோபோ’க்கள் தயாரிப்பு
வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் ‘ரோபோ’ க்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். தற்போது அனைத்து துறைகளிலும் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்நுட்பங்கள் ‘ரோபோ’வில் புகுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஸ்மார்ட் ரோபோ’க்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மனிதர்களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ரோபோ’வை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலிதனமான கேள்விகளாக கேட்கும் வகையில் அது ...
Read More »இணைய இசை அகராதி
இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் இணைய அகராதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ‘ஆன்மியூஸிக் டிக் ஷனரி’ தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது. வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளைத் தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசைக் கருவி, இசையமைப்பாளர்கள் சார்ந்தும் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது ...
Read More »தயக்கத்தை வெல்ல ஒரு செயலி
‘ஸ்டெப்ஸ்’ எனும் பெயரில் ஐபோனுக்கான புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. இந்தச் செயலி சமூகத் தயக்கங்களை உடைத்தெறிய உதவுகிறது. அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசத் தயங்குவது, புதிய இடங்களுக்குச் செல்வது, நிராகரிப்புகளை எதிர்கொள்ள அஞ்சுவது என ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சமூகச் சங்கடம் அல்லது தயக்கம் இருக்கலாம். கூட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தைரியமாக இத்தகைய சூழலை எதிர்கொள்வதே இந்தத் தயக்கங்களை வெல்ல ஏற்ற வழி எனச் சொல்லப்படுகிறது. இது வெளிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சை என அழைக்கப்படுகிறது. இந்தச் செயலி தயக்கங்களை வெல்ல வழி செய்யும் சிறிய ...
Read More »சிந்திச்சு வேகமாக தட்டச்சு செய்யலாம்!
விசைப்பலகை, குரல் அல்லது வேறு உள்ளீட்டுக் கருவிகளை பயன்படுத்தாமல், ஒருவர் சிந்திக்கும் வாக்கியங்களை, கணினித்திரையில் வேகமாகக் காட்டும் தொழிற்நுட்பத்தை ‘பிரெயின் கேட்’ என்ற ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகள் உருவாக்கி உள்ளனர். உலகெங்கும் இத்தொழில் நுட்பத்தை ஆராய்ச்சி செய்யும், பல விஞ்ஞானிகளை ஒருங்கிணைக்கும் பிரெயின் கேட், இத்தொழில் நுட்பம் பலவிதங்களில் பயன்படும் எனவும், தெரிவித்துள்ளது.மூளைத் தாக்குதல் ஏற்பட்டு, முழுமையாக செயல்பட முடியாதவர்களுக்கு, ‘மூளை- கணிப் பொறி – இடைமுக’ தொழிற்நுட்பம் (Brain-Computer-Interface) உதவுகிறது. நாம் சிந்திக்கும்போது, மூளையிலிருந்து வெளிப்படும் நுண்ணிய மின் அலைகளை புரிந்துகொண்டு, அதை ...
Read More »பிரமிடுகள் மூலம் வேற்றுகிரகவாசிகளுடன் ‘ஸ்கைப்’ இல் பேசலாம்
பிரமிடு மூலம் வேற்று கிரகத்திற்கு கூட போன் செய்ய முடியுமாம். அதுமட்டுமில்லை தேவைப்பட்டால் ஸ்கைப் கால் கூட செய்ய முடியும் என ஆச்சர்ய தகவல் தெரிவித்துள்ளார் . ஸ்கைப் எனப்படும் ஒரு எளிய மென்பொருள் இன்றைய தொலைதொடர்பு யுகத்தில்மிகுந்த செல்வாக்கைப் பெற்றுள்ளது. இந்த மென்பொருளானது VoIP எனப்படும்நவீனத் தொழில்நுட்பத்தைக் கையாள்கிறது. நடைமுறையில் நாம் பயன்படுத்தும் தொலைபேசிக் கருவிகளை விட அதி நவீனவசதிகளைக் கொண்டதாக இருந்தாலும், பயன்படுத்தும் செலவுடன் ஒப்புநோக்கும்போது மிக மிக மலிவானது. வெகுதொலைவில் உள்ளவர்களுடனும், வெளிநாட்டில் உள்ளவர்களுடனும் தொடர்புகொள்வதற்கு பணம் செலுத்த வேண்டி ...
Read More »அழிந்துவிட்ட மாமத் விலங்கை உயிர்ப்பிக்க முடியுமா?
முற்றிலும் அழிந்துவிட்ட, மாமத் விலங்கினத்தை மீண்டும் உயிர்ப்பிக்க அமெரிக்காவிலுள்ள, ஹார்வர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர். யானை இனத்தைச் சேர்ந்த மாமத், பனிப் படர்ந்த பகுதிகளில் மட்டுமே வாழ்ந்தது. கடுங்குளிரை சமாளிக்க, இதன் உடலெங்கும் சடைபோல முடி போர்த்தியிருக்கும். ரஷ்யாவின் சைபீரிய கரையிலிருந்து, 87 மைல்கள் தொலைவில், கிழக்கு சைபீரியக் கடலில் உள்ள, ராங்கல் தீவில், 6,000 வருடத்திற்கு முன் வரை உயிர் வாழ்ந்த, மாமத் இனம் அழிந்துவிட்டது. பனிப் படிமங்களிலிருந்து கிடைத்த மாமத்தின் மரபணுக்கூறுகளை எடுத்து, இன்றுள்ள ஆசிய யானையின் மரபணுவை ...
Read More »நிலாவுக்கு சுற்றுலா!
அமெரிக்காவின் தனியார் விண்வெளி அமைப்பான, ‘ஸ்பேஸ் எக்ஸ்’ 2018ன் இறுதியில், இரண்டு பயணிகளை பூமியிலிருந்து அழைத்துச் சென்று, நிலாவைச் சுற்றிக் காட்டிவிட்டு, திரும்பி அழைத்துவர திட்டமிட்டுள்ளது. மனிதகுலத்தின், முதல் நிலா சுற்றுலாவுக்கு செல்லவிருக்கும் அந்த, இரு பயணிகளும் அதற்கான கட்டணத்தை செலுத்தியிருப்பதாக, ஸ்பேஸ் எக்சின் உரிமையாளர், எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். அந்த இரு பயணிகளும், இப்போது தங்கள் பெயர்களை வெளியிடவேண்டாம் என, கேட்டுக்கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். விண்வெளி அமைப்பை சேராத, தனிநபர்கள் விண்வெளிச் சுற்றுலா செல்வது புதிதல்ல. ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆய்வுக்கூடமான ஐ.எஸ்.எஸ்.,க்கு, ...
Read More »ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்கள்!
ஒரே மூச்சில் 104 செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய இந்தியாவின் அசுர சாதனையை கண்டு டொனால்ட் டிரம்ப் தலைமையிலான அமெரிக்க அரசின் உளவுப்படை அதிர்ச்சியில் வாய் பிளந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. ஆசியா கண்டத்தின் அசைக்க முடியாத சக்தியாக உருவாகியுள்ள இந்தியா விண்வெளி ஆய்வில் பல புதிய சாதனைகளை அடுத்தடுத்து படைத்து வருகிறது. 2008-ல் சந்திரமண்டலத்தில் கால்பதித்தது, ஆசிய நாடுகளில் முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது இந்தியா, 2013-ல் செவ்வாய் கிரகத்திற்கு ‘மங்கல்யான்’ என்ற ஆளில்லா விண்கலத்தை அனுப்பியது. அடுத்தடுத்து, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ...
Read More »