இணையத்தில் இசை தொடர்பான இணையதளங்களும், சேவைகளும் அநேகம் உள்ளன. அதே போல புரியாத சொற்களுக்கு அர்த்தம் தெரிந்துகொள்ள உதவும் இணைய அகராதிகளும் நிறையவே இருக்கின்றன. இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றாக இணைந்ததாக ‘ஆன்மியூஸிக் டிக் ஷனரி’ தளம் அமைந்துள்ளது. அதாவது இசைக்கான இணைய அகராதியாக இது உருவாக்கப்பட்டுள்ளது.
வழக்கமான இணைய அகராதிகள் போலவே இதிலும் சொற்களுக்கான பொருளைத் தேடலாம். ஆனால், இசை தொடர்பான சொற்களை மட்டுமே இதில் தேட முடியும். இசைக் கருவி, இசையமைப்பாளர்கள் சார்ந்தும் தேட முடியும். இசையில் ஆர்வம் கொண்டவர்கள் அல்லது புதிதாக இசை பயில்பவர்களுக்கு இந்த அகராதி பயனுள்ளதாக இருக்கும். இவை தவிர முகப்புப் பக்கத்திலேயே தினம் ஒரு இசைச் சொல் விளக்கப்படுகிறது.
இணைய முகவரி: https://dictionary.onmusic.org/
Eelamurasu Australia Online News Portal