‘ஸ்டெப்ஸ்’ எனும் பெயரில் ஐபோனுக்கான புதுமையான செயலி ஒன்று அறிமுகமாகி உள்ளது. இந்தச் செயலி சமூகத் தயக்கங்களை உடைத்தெறிய உதவுகிறது.
அறிமுகம் இல்லாதவர்களுடன் பேசத் தயங்குவது, புதிய இடங்களுக்குச் செல்வது, நிராகரிப்புகளை எதிர்கொள்ள அஞ்சுவது என ஒவ்வொருவருக்கும் ஒரு விதமான சமூகச் சங்கடம் அல்லது தயக்கம் இருக்கலாம். கூட்டுக்குள் அடைந்து கிடக்காமல் தைரியமாக இத்தகைய சூழலை எதிர்கொள்வதே இந்தத் தயக்கங்களை வெல்ல ஏற்ற வழி எனச் சொல்லப்படுகிறது. இது வெளிப்படுத்திக்கொள்ளும் சிகிச்சை என அழைக்கப்படுகிறது.
இந்தச் செயலி தயக்கங்களை வெல்ல வழி செய்யும் சிறிய செயல்களைப் பல்வேறு தலைப்புகளில் பரிந்துரைக்கிறது. அவற்றிலிருந்து விரும்பியதைத் தேர்வு செய்தால் அது தொடர்பாக நினைவூட்டி ஊக்கம் அளிக்கிறது. பின்னர் அந்தச் செயலில் ஈடுபட்டு அந்த அனுபவத்தையும் பகிர்ந்து கொள்ளலாம். நண்பர்களையும் இந்தச் செயலில் ஈடுபட அழைக்கலாம்.
மேலும் தகவல்களுக்கு: https://www.stepsapp.xyz/
Eelamurasu Australia Online News Portal