2017 ஆம் ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் புதிய ஃபிளாக்ஷிப் போன், ஐபோன் எடிஷன் என அழைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஐபோன்களின் பத்தாவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன் மாடல்களின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோனை விட 2017 ஐபோனில் ஏகப்பட்ட அம்சங்களில் புதுமையை புகுத்த இருப்பதாக ஆப்பிள் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் ஜப்பானை சேர்ந்த செய்தி தளம் வெளியிட்டுள்ள தகவல்களில் 2017 ஐபோன்கள் “ஐபோன் எடிஷன்“ என அழைக்கப்படலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஐபோனில் 5.0 இன்ச் திரை வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இதோடு ஆப்பிள் நிறுவனம் பல்வேறு ஃபிளாக்ஷிப் போன்களை சோதனை செய்து வருவதாகவும், இவற்றில் சில மாடல்களில் ஹோம் பட்டன் இடம் பெறாது என்றும் கூறப்படுகிறது. சில ப்ரோடோடைப்களில் அலுமினியம், கிளாஸ் மற்றும் செராமிக் உள்ளிட்ட வடிவமைப்புகளை சோதனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
மற்ற தகவல்களை பொருத்த வரை OLED டிஸ்ப்ளே, வயர்லெஸ் சார்ஜிங், டூயல் கேமரா, 5.0 அல்லது 5.1 இன்ச் திரை உள்ளிட்டவை வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் டச் ஐடி சென்சாரில் சினாப்டிக்-ன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.
Eelamurasu Australia Online News Portal