வாடிக்கையாளரிடம் கேள்வி கேட்கும் ‘ரோபோ’ க்களை தயாரித்து விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
தற்போது அனைத்து துறைகளிலும் ‘ரோபோ’ எனப்படும் எந்திர மனிதனின் சேவை பயன்படுத்தப்படுகிறது. எனவே தொழில்நுட்பங்கள் ‘ரோபோ’வில் புகுத்தப்பட்டு வருகிறது.
இந்த வகையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ‘ஸ்மார்ட் ரோபோ’க்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. சமீபத்தில் மனிதர்களிடம் கேள்வி கேட்க கூடிய புதிய வகை ‘ரோபோ’க்கள் தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்த ‘ரோபோ’வை அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். பணியில் ஈடுபடும் ‘ரோபோ’ குழப்பமான சூழ்நிலையில் தனது சந்தேகங்களை புத்திசாலிதனமான கேள்விகளாக கேட்கும் வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இது ஒரு மிகப்பெரும் சாதனையாக கருதப்படுகிறது. அதன்மூலம் ‘ரோபா’க்களின் செயல்பாடுகளின் திறன் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.