நுட்பமுரசு

ஊக்கம் தரும் உரைகளுக்கு

கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்தால் இணையம் ஒரு வகுப்பறை யாக இருக்கும். உங்கள் ஆர்வம் அல்லது தேடல் தொடர்பான எந்தத் தலைப்பிலான வீடியோ பாடங்களையும் இணையத்தில் கண்டுபிடித்துவிடலாம். இப்போது இந்தத் தேடலில் கைகொடுக்க வந்துள்ளது ‘ஃபைண்ட்லெக்சர்ஸ்’ எனும் இனையதளம். கோர்சரா, கான் அகாடமி போன்ற இணையத் திட்டங்கள் இத்தகைய பாடங்களை வழங்கி வருகின்றன என்றால், உலகப் புகழ் பெற்ற கல்வி நிறுவனங்களான எம்.ஐ.டி, ஆக்ஸ்ஃபோர்ட் உள்ளிட்டவற்றின் பாடங்கள் மற்றும் பேராசிரியர்களின் உரைகளும் இணையம் மூலம் எளிதில் அணுகக்கூடியதாக இருக்கின்றன. யூடியூப்பிலும் கல்வி தொடர்பான வீடியோ சேனல்கள் ...

Read More »

ஃபேஸ்புக் தளத்தில் க்ரூப் காலிங் வசதி அறிமுகம்

ஃபேஸ்புக்கில் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டள்ளது. இதே போன்ற அம்சம் மற்ற சமூக வலைத்தளங்களிலும் சில காலமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இன்று பயன்பாட்டில் இருந்து வரும், மற்ற தளங்கள் வழங்கும் அம்சங்களை அப்படியே வழங்குவதாக ஃபேஸ்புக் மீது சொல்லப்படாத குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களும் வழங்கி வருகின்றன. ஃபேஸ்புக் வாசிகள் நேரடியாக க்ரூப் சாட் ஆப்ஷன் சென்றால் அங்கு காலிங் ...

Read More »

ஸ்மார்ட்போன் பேட்டரி பேக்கப் நீட்டிக்க சில டிப்ஸ்

ஸ்மார்ட்போன் பயனர்களின் நீண்ட கால பிரச்சனையாக இருக்கும் பேட்டரி பேக்கப் நேரத்தை நீட்டிக்க என்னென்ன செய்யலாம் என்பதை பார்ப்போம். ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்களின் நீண்ட நாள் பிரச்சனையாக இருப்பது, அதன் பேட்டரி பேக்கப் எனலாம். ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்ய பலரிடம் எந்நேரமும் பவர் பேங்க் காணப்படுவதும் வாடிக்கையாகி விட்டது. துவக்கம் முதலே ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் இந்த பிரச்சனையை சரி செய்வதை விட அதிகளவு பேட்டரியை தான் வழங்கி வருகின்றன. சில ஸ்மார்ட்போன்களில் அதிகளவு பேட்டரி வழங்கப்பட்டாலும் பேக்கப் என்னவோ ஒரு நாள் மட்டுமே கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களில் ...

Read More »

போக்கிமான் கோ சாதனையை முறியடித்த சூப்பர் மேரியோ ரன்

உலகெங்கும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன், வெளியான முதல் நாளிலேயே போக்கிமான் கோ சாதனையை முறியடித்தது. அப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் இயங்குதளத்தில் நின்டென்டோவின் சூப்பர் மேரியோ ரன் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. உலகெங்கும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட சூப்பர் மேரியோ ரன் வெளியான சில மணி நேரங்களில் மொபைல் கேம்களுக்கான தரவரிசை பட்டியலில் முன்னேற்றம் கண்டது. இந்நிலையில் வெளியான முதல் நாளில் மட்டும் சூப்பர் மேரியோ ரன் கேமினை சுமார் 2,850,000 பேர் டவுன்லோடு செய்திருக்கின்றனர். முன்னதாக போக்கிமான் கோ, வெளியான ...

Read More »

ஃபேஸ்புக் மெசேஞ்சரில் புதிய கேமரா வசதி

குறுந்தகவல்கள் அனுப்புவதை எளிமையாக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசேஞ்சர் செயலியில் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது. வாடிக்கையாளர்கள் செயலியில் உரையாடும் வழிமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் எளிமையாகவும், அதிக அம்சங்களும் நிறைந்த கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் தினசரி அடிப்படையில் சுமார் 250 கோடி எமோஜிக்கள், புகைப்படம், ஸ்டிக்கர் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்கள் எழுத்துக்களை விட காணொளிகளையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொண்டோம்’, என ...

Read More »

அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் முதன்முறையாக பொருள் வழங்கல்

அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் முதன்முறையாக பொருள் ஒன்றை டோர் டெலிவரி செய்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலமாக பொருள் ஒன்றை தனது வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்துள்ளது. கடந்த டிசம்பர் 7-ம் திகதி ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி செய்த அமேசான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த காணொளி ஒன்றையும் அமேசான் வெளியிட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் பொருளை ஆர்டர் செய்த ...

Read More »

சாயத்திலிருந்து சூரிய மின்சாரம்!

சூரிய ஒளி மின்சாரத்தை உற்பத்தி செய்ய, இப்போது பல புதிய பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் மிக மலிவானது, வளைந்து கொடுக்கும் தன்மை உள்ளது; ‘பெரோவ்ஸ்கைட்’ என்ற பொருள் தான் என, விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அண்மையில் ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள், பெரோவ்ஸ்கைட்டை பயன்படுத்தி உருவாக்கிய சூரிய ஒளி மின் அமைப்பு, மின் தயாரிப்பில் சாதனை படைத்துள்ளது. கால்சியம் டைட்டானேட் என்ற பொருளை அதிகம் கொண்ட மஞ்சள், பழுப்பு மற்றும் கறுப்பு நிறங்களில் கிடைக்கும் தாதுவைத்தான், பெரோவ்ஸ்கைட் என்கின்றனர் விஞ்ஞானிகள். நியூ சவுத் வேல்ஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ...

Read More »

சூரிய மின்சார தீவு

மின்சார கார்களில் முத்திரை பதித்த, ‘டெஸ்லா’ நிறுவனம், சமீபத்தில் சூரிய மின்சாரத்தை சேமிக்கும் மின்கலன்களை தயாரிக்கும் சோலார் சிட்டி நிறுவனத்தை வாங்கிய கையோடு, ஒரு புதிய சாதனையை அறிவித்திருக்கிறது. ஒரு சிறு தீவில் வசிப்பவர்களின் முழு மின்சார தேவையையும் சூரிய மின் தகடுகள் மூலம் வழங்கியிருக்கிறது டெஸ்லா, சோலார் சிட்டி கூட்டணி.அமெரிக்காவுக்கு சொந்தமான ஹவாய் தீவு கூட்டங்களில் ஒன்றான, ‘தாவ்’ தீவு, 17 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இத்தீவில் வசிக்கும், 785 பேருக்கு தேவையான மின்சாரத்தை, தினமும், 1,135 லிட்டர் டீசல் செலவு ...

Read More »

கம்ப்யூட்டருக்கு நிகரான வேகம் கொண்ட புதிய ஸ்மார்ட்போன்

அடுத்த ஆண்டு வெளியாக இருக்கும் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ ஸ்மார்ட்போன்கள் கம்ப்யூட்டருக்கு நிகரான வேகத்தில் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 2017 ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் சிறப்பம்சங்கள் சார்ந்த தகவல்கள் வெளியாக துவங்கியுள்ளன. தனித்துவம் வாய்ந்த மொபைல் போன் ஒன்றை உருவாக்கி வருவதாக மைக்ரோசாஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரியான சத்ய நாதெல்லா தெரிவித்துள்ளார். எனினும் இது சர்ஃபேஸ் போன் தானா அல்லது வேறு ஏதேனும் மாடல் போனா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களில் இது சர்ஃபேஸ் போன் ...

Read More »

தரையில் டைட்டானிக்

டைட்டானிக் கப்பலை போல சீனாவில் உருவாக்கி வருகின்றனர். ஆனால் இந்த கப்பல் கடலுக்கு போகாது. சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக சென்க்டு என்கிற இடத்தில் கட்டுகின்றனர். இந்த ஊர் கடலிலிருந்து 1200 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ளது. டைட்டானிக் போலவே 882 அடி நீளம், 92 அடி உயரத்தில் உயரத்தில் அமைக்கிறார்கள் டைட்டானிக் கப்பலில் இருந்த அனைத்து அம்சங்களும் இருக்கும். இதற்கு 14.5 கோடி டாலர் செலவாகும் என மதிப்பிட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகளில் கட்ட உள்ளனர்.

Read More »