அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலம் முதன்முறையாக பொருள் ஒன்றை டோர் டெலிவரி செய்துள்ளது.
உலகின் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களில் ஒன்றாக அமேசான் நிறுவனம் திகழ்கிறது. இந்நிலையில் அமேசான் நிறுவனம் ஆளில்லா விமானம் மூலமாக பொருள் ஒன்றை தனது வாடிக்கையாளருக்கு டெலிவரி செய்துள்ளது.
கடந்த டிசம்பர் 7-ம் திகதி ஆளில்லா விமானம் மூலம் டோர் டெலிவரி செய்த அமேசான் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அதனை உறுதிப்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்த காணொளி ஒன்றையும் அமேசான் வெளியிட்டுள்ளது.
அமேசான் இணையதளத்தில் பொருளை ஆர்டர் செய்த 13 நிமிடங்களில் கேம்பிரிட்ஜில் உள்ள வாடிக்கையாளர் வீட்டுக்கு ஆளில்லா விமானம் பொருளை கொண்டு சேர்த்துள்ளது. இந்தவகை விமானம் மூலமாக 2.7 கிலோ கிராம் வரையிலான எடை கொண்ட பொருட்களை எடுத்து செல்லலாம் என்பது குறிப்பிடத்தக்கது.