குறுந்தகவல்கள் அனுப்புவதை எளிமையாக்கும் விதமாக ஃபேஸ்புக் நிறுவனம் தனது மெசேஞ்சர் செயலியில் புதிய அம்சத்தை வழங்கியுள்ளது.
வாடிக்கையாளர்கள் செயலியில் உரையாடும் வழிமுறைகளை மேம்படுத்தும் நோக்கில் ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் எளிமையாகவும், அதிக அம்சங்களும் நிறைந்த கேமராவினை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சம் விரைவில் உலகளவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஃபேஸ்புக் மெசேஞ்சர் செயலியில் தினசரி அடிப்படையில் சுமார் 250 கோடி எமோஜிக்கள், புகைப்படம், ஸ்டிக்கர் மற்றும் வீடியோக்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. பயனர்கள் எழுத்துக்களை விட காணொளிகளையே அதிகம் விரும்புகின்றனர் என்பதை அறிந்து கொண்டோம்’, என ஃபேஸ்புக் வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘ஏதோ ஒரு வழியில் கீபோர்டுகளுக்கு மாற்றாக கேமரா பயன்படுத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலான மெசேஞ்சர் வாடிக்கையாளர்கள் இந்த அம்சத்தினை அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் பயன்பாட்டு வழிமுறைகளை மேலும் எளிமையாக்கும் விதமாக புதிய கேமரா அம்சம் வழங்கப்பட்டுள்ளது’, என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.
புதிய மெசேஞ்சர் கேமரா வேகமாக இயங்குவதுடன், பல்வேறு புதிய அம்சங்களையும் கொண்டுள்ளது. இத்துடன் கேமராவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை எடிட் செய்ய பல்வேறு வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.