ஃபேஸ்புக் தளத்தில் க்ரூப் காலிங் வசதி அறிமுகம்

ஃபேஸ்புக்கில் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டள்ளது. இதே போன்ற அம்சம் மற்ற சமூக வலைத்தளங்களிலும் சில காலமாக வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இன்று பயன்பாட்டில் இருந்து வரும், மற்ற தளங்கள் வழங்கும் அம்சங்களை அப்படியே வழங்குவதாக ஃபேஸ்புக் மீது சொல்லப்படாத குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில் ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்திலும் க்ரூப் காலிங் வசதி வழங்கப்பட்டுள்ளது. இதே அம்சம் சில காலமாக ஸ்கைப் மற்றும் ஹேங்அவுட்ஸ் உள்ளிட்ட தளங்களும் வழங்கி வருகின்றன.
ஃபேஸ்புக் வாசிகள் நேரடியாக க்ரூப் சாட் ஆப்ஷன் சென்றால் அங்கு காலிங் செய்யக் கோரும் அம்சத்தினை பார்க்க முடியும். இத்துடன் இந்த வசதி உங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதை தெரிவிக்கும் நோட்டிபிகேஷன் ஒன்றும் வழங்கப்பட்டிருக்கும். இதே க்ரூப் காலிங் அம்சம் சில மாதங்களுக்கு முன் மெசஞ்சர் செயலியிலும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஏப்ரல் மாதம் மெசேஞ்சர் செயலியில் வழங்கப்பட்ட க்ரூப் காலங் அம்சம் அனைவருக்கும் வழங்கப்படுவது குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எல்லோரும் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை தொடர்ந்து இந்த அம்சம் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுடன் அலுவல் மற்றும் நட்பு வட்டாரங்களிடம் என எவ்வித பயன்பாட்டிற்கும் பயன்படுத்த முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்சமயம் வரை க்ரூப் ஆடியோ காலிங் அம்சம் மட்டும் ஃபேஸ்புக் அறிவித்திருக்கிறது. இதுதவிர விளம்பரங்களை மறைக்க கோரும் வசதியை வழங்குவது குறித்து ஃபேஸ்புக் தற்சமயம் பணியாற்றி வருகிறது. துவக்கத்தில் மதுபானம் மற்றும் சில குறிப்பிட்ட பொருட்கள் சார்ந்த விளம்பரங்களை மட்டும் முடக்கக் கோரும் வசதி வழங்கப்படலாம் என தெரிகிறது.