Home / திரைமுரசு (page 174)

திரைமுரசு

விருப்பங்களை நீங்களே தேர்ந்தெடுப்பீர் – அமிதாப் பச்சன்

நடிகர் அமிதாப் பச்சன் தன்னுடைய பேத்திகள் நவ்யாவுக்கும் ஆராத்யாவுக்கும் நெகிழ்ச்சியான கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். சமூகத்தில் நிலவும் பாலின வேறுபாடு குறித்தும், பெண்கள் நடத்தப்படும் விதம் குறித்தும் கூறியிருக்கும் அமிதாப் தன் பேத்திகளை பெண்ணினத்துக்கு உதாரணமாக வாழ வேண்டும் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தன் இரு பேத்திகளுக்கு மட்டுமின்றி, இந்தக் கடிதம் எல்லா பேத்திகளுக்கும் உரியது என்று அமிதாப் தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். அந்தக் கடிதத்தின் விவரம்: ...

Read More »

எம்.ஜி.ஆர்., பேரன் நடிக்கும் ‛ஓடு குமார் ஓடு

சமூகமும் சினிமாவும் இரட்டைக் குழந்தைகள் போல. சினிமா சமூகத்தை பிரதிபலிக்கிறது. சமூகம் சினிமாவை பிரதிபலிக்கிறது. இன்று செய்தித்தாளைப் பிரித்தாலே கள்ளக்காதல் செய்திகள் தான் அதிகம் தென்படுகின்றன. இன்றைய கள்ளக்காதல் கொலைகள் என்று தனி பக்கமே கொடுக்கும் அளவுக்கு கணவன் அல்லது மனைவியின் தகாத உறவின் விளைவால் நடக்கும் கொலை, குற்றங்கள் ஏராளம். இந்த சூழ்நிலையில், கணவன் மனைவிக்கிடையேயான அன்னியோன்யத்தையும், அந்த அன்னியோன்யம் கெடுவதால் ஏற்படும் விளைவுகளையும் சொல்லும் ஒரு விறுவிறுப்பான ...

Read More »

ஜேக்கி சானுக்கு ஒஸ்கர் விருது

திரைத்துறையில் இதுவரை ஆற்றிய வாழ்நாள் சேவைக்காக, சீனத் திரைப்பட நடிகர் ஜேக்கி சானுக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படுகிறது.  ஹாங்காங்கில் பிறந்த ஜாக்கி சானுக்குத் தற்போது 62 வயதாகிறது. சீனத் திரைப்படங்களில்  அசாத்தியமான சண்டை காட்சிகளில் நடித்ததன் மூலம் தனது திறமையை வெளிப்படுத்தியவர்.  இதன்மூலம்  ஹாலிவுட் திரைப்படங்களில் காலடி வைத்து “ரஷ் ஹவர்”, “கராத்தே கிட்” போன்ற திரைப்படங்களில் நடித்து புகழ்ப்பெற்றவர். இதுவரை 30 திரைப்படங்களை இயக்கியுள்ள ஜாக்கி சான் திரைத்துறையில் ...

Read More »

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடும் தமன்னா, காஜல்

படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட தமன்னா ரூ.75 லட்சமும், காஜல் அகர்வால் ரூ.50 லட்சமும் சம்பளம் வாங்குகிறார்கள். கதாநாயகிகள் சிலர், படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி சம்பாதிக்கிறார்கள். ஓரிரு நாட்கள் கால்ஷீட் கொடுத்து நடன காட்சியை முடித்து கொடுக்கின்றனர். இதற்கு பெரும் தொகையை சம்பளமாக வாங்கிக்கொள்கிறார்கள். ஆனால் மேலும் சில முன்னணி கதாநாயகிகள் ஒரு பாடலுக்கு ஆடுவது இல்லை என்பதை கொள்கையாக வைத்து இருக்கிறார்கள். நயன்தாரா ‘சிவகாசி’ படத்தில் ...

Read More »

ரஜினி படத்துக்கு இசையமைக்கிறார் அனிருத்

தனுஷ் நடித்த 3 படத்தில் இசையமைப்பாளரானவர் அனிருத். அந்த படத்தில் இடம்பெற்ற ஒய்திஸ் கொலவெறி -என்ற பாடல் உலகமெங்கிலும் பிரபலமாகி அவரை உச்சத்துக்கு கொண்டு சென்றது. அதையடுத்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, மான்கராத்தே, கத்தி, வேதாளம் என பல படங்களில் சூப்பர் ஹிட பாடல்களை கொடுத்து குறுகிய காலத்தில் முன்னணி இசையமைப்பாளரானார் அனிருத். அதனால் விரைவில் அவர் ரஜினி படத்திற்கும் இசையமைத்து விடுவார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஜினி நடித்த ...

Read More »

ஆறுதல் தேடி அவுஸ்ரேலியா பறக்கும் நடிகை

இரண்டு எழுத்து கவர்ச்சி நடிகை அவர். சொந்த படம் எடுத்து கோடிகளை இழந்தார், “மச்சி ஓப்பன் தி பாட்டில்” என்று கொண்டாடும் நட்பு வட்டாரத்துக்கு கடன் கொடுத்து நம்பி சில கோடிகளை இழந்தார். சொந்தமாக ஆரம்பித்த வியாபார நிறுவனங்கள் நஷ்டத்தை கொடுத்தது. தமிழ் படங்கள் கைவிட மலையாள பக்கம் ஒதுங்கியவருக்கு அங்கேயும் சரியான வாய்ப்பு இல்லை. இதனால் மனம் வெறுத்துப்போன நடிகை மன ஆறுதலுக்காக தனது அக்கா வசிக்கும்ஸ்திஅவுஸ்ரேலியாவுக்கு அடிக்கடி ...

Read More »

ஐஸ்வர்யா தனுஷ் ஐ.நா.அமைப்பின் பெண்களுக்கான இந்திய தூதராக நியமனம்

ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். சினிமா இயக்குநரான  ஐஸ்வர்யா தனுஷ், பெண்கள் முன்னேற்றம் மற்றும் பெண்கள் வளர்ச்சிக்கான ஐ.நா. அமைப்பின் இந்தியாவிற்கான தூதராக நியமிக்கப்பட்டு உள்ளார். இவரை உலகநாடுகள் கூட்டமைப்பின் துணை பொது செயலாளர் மற்றும் உலகநாடுகளின் பெண்கள் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குநர் லட்சுமி பூரி நியமித்து உள்ளார். ஐஸ்வர்யா தனுஷ் பெண்களுக்கான சம உரிமை மற்றும் அவர்களின் ...

Read More »

பிரபல பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணம்

பிரபல கிராமிய பாடகர் திருவுடையான் கார் விபத்தில் மரணமடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் இசைப் பாடகரும், தமுஎகச திருநெல்வேலி மாவட்டச் செயலாளருமாக இருந்தவர் பாடகர் சங்கை திருவுடையான். ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், அவர்தம் உரிமைகளுக்காகவும் இரவுப் பகலாக தெருத் தெருவாகப் பாடித்திரிந்தவர் திருவுடையான். நேற்று இரவு(28) திருவுடையான், சேலத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பாடிவிட்டு காரில் திரும்பும் போது வாடிப்பட்டி அருகே, முன்னே சென்ற லாரியின் மீது மோதி சம்பவ ...

Read More »

தமன்னாவுக்காக பாடவுள்ள ஸ்ருதிஹாசன்

ஸ்ருதிஹாசன் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. அவர் இதற்கு முன் 7ம் அறிவு, 3, என்னமோ ஏதோ, மான் கராத்தே, புலி, வேதாளம்' ஆகிய படங்களில் சூப்பர் ஹிட்டான பாடல்களைப் பாடியுள்ளார். யாராவது பாட அழைத்தால் மட்டுமே பாடும் ஸ்ருதிஹாசன் அடுத்து தமன்னாவுக்காக பாட உள்ளார். விஷால் ஜோடியாக தமன்னா நடித்து வரும் கத்திச் சண்டை படத்தில்தான் ஸ்ருதிஹாசன் பாட உள்ளாராம். தமிழில் தமன்னாவுக்காக ஸ்ருதி பாட உள்ள முதல் ...

Read More »

“நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்”

நடிகை சமந்தா ஐதராபாத்தில் அளித்த பேட்டி வருமாறு:- “என்னைப் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வருகின்றன. சொந்த வாழ்க்கையும் விவாதத்துக்கு உள்ளாகிறது. இது வருத்தப்பட வைக்கும் விஷயங்கள். நாட்டில் நல்லவைகள் இருக்கின்றன. அதைப்பற்றி அதிகமாக பேசுவதுதான் வரவேற்க கூடியதாக இருக்கும். ‘பிரம்மோற்சவம்’ (தெலுங்கு) படத்தில் சத்யராஜ், “நல்ல விஷயங்களை எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும்” என்று ஒரு வசனம் பேசுவார். அந்த வசனம், படத்தில் அடிக்கடி வரும். எனக்கு அந்த வசனம் ...

Read More »