சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட வெளிநாட்டிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த தமிழ் படமும் பெற்றிராத வெற்றியை ரெமோ பெற்றிருக்கிறது.
இதற்காக அங்குள்ள தமிழ் அமைப்புகள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ளுமாறு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று தற்போது சிவகார்த்திகேயன் அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளார்.
அவுஸ்ரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் மோகன் ராஜா இயக்கும் படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில், ஆர்ஜே பாலாஜி, பிரகாஷ்ராஜ், ரோபோ சங்கர், தம்பி ராமய்யா உள்பட பலர் நடிக்கிறார்கள். நயன்தாரா முதன் முறையாக சிவகார்த்திகேயனோடு நடிக்கிறார். இதன் படப்பிடிப்புகள் நவம்பர் மாதம் 11ந் திகதி தொடங்குகிறது.
Eelamurasu Australia Online News Portal