திரைமுரசு

சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்! -கிருத்திகா உதயநிதி

‘என்னைப் பொறுத்தவரைக்கும் சினிமாவும் அரசியலும் வேறு வேறுதான்’ எனத் தெரிவித்துள்ளார் கிருத்திகா உதயநிதி. ‘வணக்கம் சென்னை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கிருத்திகா உதயநிதி. அவருடைய இரண்டாவது படம் ‘காளி’ சமீபத்தில் வெளியானது. இயக்குநராக இருந்தாலும், திமுக குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற அடையாளமும் அவருக்கு இருக்கிறது. அவருடைய கணவரான உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பாளர், ஹீரோவாக இருந்தாலும், கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் மேடைகளில் தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறார். ‘அரசியலில் எந்த அளவுக்கு உங்கள் கணவருக்கு உதவியாக இருப்பீர்கள்?’ என்று கிருத்திகாவிடம் கேட்ட போது  “நான் அவருக்குச் செய்யும் ...

Read More »

ராஸி – விமர்சனம்

1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடை 1970களில் நடக்கின்ற கதை. கல்லூரி இளம் மாணவி அலியா பட், கவலை என்பதையே அறியாத ஒரு சந்தோஷப் பறவை. திடீரென்று ஒருநாள் அவருடைய வாழ்க்கையே திசை மாறுகிறது. இந்தியப் புலனாய்வுப் பிரிவில் பணிபுரியும் அவரது அப்பா ரஜித் கபூர், பாகிஸ்தானைச் சேர்ந்த ராணுவ வீரர் விக்கி கவுஷலுக்கு அலியாவை திருமணம் செய்து வைக்கிறார். விக்கியின் அப்பாவும், ரஜித் கபூரும் பிரிவினைக்கு ...

Read More »

‘‘ காற்று மண்டலத்தில் பறக்க ஆசை’’! – ஏஞ்சலினா ஜோலி

லண்டனில் விமானம் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மகன் நாக்ஸ். ஒன்பது வயது மகன் நாக்ஸ் ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலியின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து ஒரு விமானத்தை ஓட்ட கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார். அப்படி அவர் கற்றுக்கொள்ள உந்துதலாக இருந்த காட்சி மிகவும் சுவாரஸ்யமானது. ஏஞ்சலினா ஜோலியும் அவரது மகன் நாக்ஸும் ஒரு விமான நிலையத்தில் மதிய உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து மேலெழுவதையும் வேறொரு விமானம் தரையிறக்கப்படுவதையும் அவர்கள் அங்கு கண்டுகளித்தனர். அதன்பிறகுதான் விமானம் ஓட்டவேண்டும் ...

Read More »

ஜெமினி கணேசன் ஆவணப்படத்தில் சாவித்திரிக்கு எதிரான காட்சிகள்?

நடிகை சாவித்திரியின் நடிகையர் திலகம் படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் வாழ்க்கையை பற்றிய ஆவணப்படம் தயாராகி வருகிறது. சாவித்திரி கதையில் ஜெமினி கணேசனை வில்லனாக சித்தரித்து இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. சாவித்திரியை மதுகுடிக்க வைத்து போதைக்கு ஜெமினி கணேசன் அடிமையாக்குவது போன்றும் காட்சி வைத்து இருந்தனர். இது சர்ச்சையை கிளப்பியது. ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இதனை கண்டித்தார். தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை சாவித்திரி தமிழில் படமாக தயாரிக்க முன்வந்தபோது ஜெமினி கணேசன் தடுத்தார் என்றும், அப்போது நாயையும், வேலைக்காரர்களையும் ...

Read More »

மௌன ராகம் தொடரால் கிருத்திகாவின் கற்றல்?

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஔிபரப்பாகும் மௌன ராகம் என்ற நாடகத் தொடரின் மூலம் குழந்தை நட்சத்திரங்களில் பலரின் மனதை வென்றுள்ளவர் வேலன் என்கிற கிருத்திகா. வேலன் என்று கூறினால் தான் இவரை அதிக பேருக்கு அடையாளம் தெரியும். மிகவும் பரப்பரப்பாக போய்க்கொண்டிருக்கும் இந்த நாடகத்தில் கிருத்திகாவுக்குதான் முக்கிய பாத்திரம் என கூறலாம். இவர் சமீபத்திய ஒரு பேட்டியில், எனக்கு பெங்களூரில் பள்ளி படிக்க வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் இந்த நாடக தொடர் காரணமாக என்னால் அங்கு படிக்க முடியவில்லை. நாடக தொடர் ...

Read More »

ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் – அத்துமீறியதால் பரபரப்பு!

ஜான்வி கபூர் நடிப்பில் தடக் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பாதுகாவலர்கள் இன்றி வெளியே சென்ற ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்திருக்கிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு  தயாராகி வருகிறது. ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குடும்பத்தினர் இல்லாமல் ...

Read More »

பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் மரணம்!

பிள்ளைகளால் கைவிடப்பட்ட பழம்பெரும் இந்தி நடிகை கீதா கபூர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். ‘பாகியா’ என்ற இந்தி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை கீதா கபூர். 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். கடந்த ஆண்டு கீதா கபூரை அவரது மகன் ராஜா சிகிச்சைக்காக மும்பை கோரேகாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரிக்கு கட்டணம் செலுத்தாமலே அங்கு இருந்து சென்றுவிட்டார். இதேபோல விமான பணிப்பெண்ணாக இருக்கும் நடிகையின் மகள் பூஜாவும் அவரை பார்க்க கூட வரவில்லை. ...

Read More »

முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெறும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார். சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் ...

Read More »

மாற்றுக்களம்: மீண்டெழும் சிறகு!

பள்ளி முடிந்து மாலையில் வீடு திரும்புகிறாள் அந்தச் சிறுமி. பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிக்கும் அவளிடம் ஆசை வார்த்தைப் பேசிட, பசியாற்றிட வீட்டில் யாருமில்லை. சிறுமியின் அம்மாவுக்கும் அப்பாவுக்கு வீடு விட்டால் அலுவலகம், அலுவலகம் விட்டால் வீடு. நின்று பேசக்கூட நேரம் இல்லாத கார்ப்பரேட் அடிமைகள். வீட்டோடு தங்கியிருக்கும் பணிப்பெண் தன் ஸ்மார்ட் கைபேசிக்கு கரிசனம் காட்டுகிறாள். இரவில் வீடு திரும்பும் பெற்றோருக்காக மாலை வேளையிலிருந்து காத்திருக்கிறாள் அந்தப் பிஞ்சு சிறகு. இடைப்பட்ட வேளையில் ஓவியம் தீட்டுகிறாள். அந்த ஓவியத்தை தன் பெற்றோரிடம் காட்டுவதற்காக ...

Read More »

எங்கோ வாழும் முதலாளி முக்கியமா? இங்கு வாழும் நம் மக்கள் முக்கியமா?

ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பேரணி நடத்திய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், நடிகர் சத்யராஜும் கண்டனம் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தூத்துக்குடி மக்கள் கடந்த 100 நாட்களாக தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டத்தின் 100-வது நாளான நேற்று ஆயிரக்கணக்கான மக்கள் மாவட்ட ஆட்சிர் அலுவலகத்தை நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொதுமக்களில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் தூத்துக்குடியில் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த சம்பவத்துக்கு பலரும் கண்டங்களை தெரிவித்து ...

Read More »