இது சர்ச்சையை கிளப்பியது. ஜெமினி கணேசன் மகள் டாக்டர் கமலா செல்வராஜ் இதனை கண்டித்தார். தெலுங்கில் தோல்வி அடைந்த படத்தை சாவித்திரி தமிழில் படமாக தயாரிக்க முன்வந்தபோது ஜெமினி கணேசன் தடுத்தார் என்றும், அப்போது நாயையும், வேலைக்காரர்களையும் ஏவி சாவித்திரி எங்களை விரட்டினார் என்றும் அவர் கூறியிருந்தார்.
சாவித்திரி முன்னணி கதாநாயகியாக இருந்தபோது ஜெமினி கணேசன் படங்கள் இல்லாமல் கவலையில் மது குடிப்பதுபோன்று காட்சிகள் வைத்து இருந்ததையும் எதிர்த்தார். இந்த நிலையில் சாவித்திரி படத்துக்கு போட்டியாக ஜெமினி கணேசன் குடும்பத்தினர் அவரது வாழ்க்கையை ஆவணப்படமாக எடுத்து வெளியிடும் முயற்சியில் இறங்கி உள்ளனர். இந்த படத்தில் சாவித்திரி படத்தில் மறைக்கப்பட்ட அவருக்கு எதிரான உண்மை சம்பவங்கள் இடம்பெற்று இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஆவணப்படம் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal