லண்டனில் விமானம் ஓட்ட பயிற்சி எடுத்து வருகிறார் ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலியின் மகன் நாக்ஸ்.
ஒன்பது வயது மகன் நாக்ஸ் ஹாலிவுட் நடிகை ஆஞ்சலினா ஜோலியின் அடிச்சுவடுகளைப் பின்தொடர்ந்து ஒரு விமானத்தை ஓட்ட கற்றுக் கொள்ளத் தொடங்கியுள்ளார்.
விமானம் ஒன்று ஓடுபாதையிலிருந்து மேலெழுவதையும் வேறொரு விமானம் தரையிறக்கப்படுவதையும் அவர்கள் அங்கு கண்டுகளித்தனர். அதன்பிறகுதான் விமானம் ஓட்டவேண்டும் என்று விரும்பி அதற்கான பயிற்சியிலும் நாக்ஸ் ஈடுபட தொடங்கினார்.
இதுகுறித்து ‘தி குயின்’ஸ் கிரீன் பிளானெட்’ ஆவணப்படத்தில் ஜோலி கூறியவதாது:
”நான் காற்றுமண்டலத்தில் இருப்பதை மிகவும் விரும்புகிறேன். வானில் பறக்கும் சுதந்திரத்தை நேசிக்கிறேன். நாக்ஸ் இப்போது பறக்கக் கற்று வருகிறான். அதில் கிடைக்கும் வேடிக்கையான ஒரு சந்தோஷத்தை அவன் கண்டுபிடித்து விட்டான். விமானம் ஓட்டுவதற்கு இப்போதும்கூட அவனுக்கு பெடல்களின் உதவி தேவைப்படுகிறது. ஆனால் நீண்ட நாட்களுக்கு அவற்றின் உதவி தேவைப்படாது” என்றார்.
”மேல்ஃபிசென்ட்” திரைப்படத்தின் இந்நாயகி, ‘நமீபியன் டிசர்ட்’ என்ற ஆவணப்படத்தில் சின்னஞ்சிறு விமானம் ஒன்றின் விமானியாக தோன்றியுள்ளார் விமான ஓட்டுவதற்கான தனது உரிமத்தை 2004ல் பெற்றவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தான் பெற்றெடுத்த 3 குழந்தைகளுடன், தத்தெடுத்த 3 குழந்தைகளையும் ஒரே வீட்டில் வளர்த்து வருகிறார். 42 வயதைக் கடந்தநிலையிலும் ஏஞ்சலினா ஜோலி. சமூக சேவைகளையும் தொடர்ந்து வருகிறார் ஏஞ்சலினா.
சமீபத்தில் இவர் இயக்கிய ‘ஃபஸ்ட் தே கில்டு மை ஃபாதர்’ (2018) என்ற படத்திற்கு சிறந்த இயக்குநருக்கான விருது கிடைத்துள்ளது.
Eelamurasu Australia Online News Portal