ஜான்வி கபூர் நடிப்பில் தடக் படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், பாதுகாவலர்கள் இன்றி வெளியே சென்ற ஜான்வியை பார்க்க கூடிய ரசிகர்கள் அத்துமீறியதால் பரபரப்பு ஏற்பட்டது.
மறைந்த நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர். இவர் மராத்தியில் வரவேற்பை பெற்ற ‘சாய்ரத்’ படத்தின் இந்தி ரீமேக்கான ‘தடக்’ படத்தில் நடித்திருக்கிறார். சஷாங்க் கைதான் இயக்கியிருக்கும் இந்த படத்தில் நாயகனாக இஷான் கட்டார் நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது.
ஸ்ரீதேவி மறைவுக்கு பிறகு பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குடும்பத்தினர் இல்லாமல் தனியாகவே செல்கிறார். அந்த வகையில், மும்பை பந்த்ரா பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு பாதுகாவலர்கள் இல்லாமல் தனியாக சென்றார்.
ஜான்வி வந்த தகவல் அறிந்து ரசிகர்கள் மற்றும் சிறுவர்கள் பலரும் அந்த ஓட்டல் முன்பு திரண்டனர். வெளியே வந்த ஜான்வியிடம் செல்பி எடுக்கவும், ஆட்டோகிராப் வாங்கவும் அவர்கள் முண்டியடித்தனர். அப்போது அவர்களுடன் ஜான்வி சிரித்தபடி உரையாடினார். மேலும் ரசிகர்கள் கூட்டத்திலும் சிக்கினார்.

அப்போது சிலர் அத்துமீறி ஜான்வி கையை பிடித்து இழுத்தனர். முகத்திலும், முதுகிலும் தொட்டார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் ஊழியர்கள் விரைந்து வந்து கூட்டத்தினரை விலக்கி, ஜான்வியை பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
Eelamurasu Australia Online News Portal