அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கனா படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரரிடம் பயிற்சி பெற்று வருகிறார்.
சிவகார்த்திகேயன் தயாரிப்பில் அவரது நண்பர் அருண்ராஜ காமராஜ் இயக்கத்தில் கனா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
ஒரு கிரிக்கெட் வீராங்கனையின் முன் இருக்கும் சவால்களையும் அவற்றை ஒரு பெண் எப்படி வென்று காட்டுகிறாள்? என்பதையும் மையமாக வைத்து உருவாகிறது கனா படம். கிரிக்கெட் தொடர்பான படம் என்பதால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான வாட்மோரிடம் பயிற்சியும் ஆலோசனையும் பெற்று வந்து இருக்கிறார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யாவுடன் தான் இருக்கும் படத்தை பதிந்து அவருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து இருக்கிறார் வாட்மோர். சமீபத்தில் வெளியான கனா படத்தின் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வீடியோவுக்கு சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பை கிடைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal