திரைமுரசு

ஒஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட தமிழ் படங்கள் ஒரு பார்வை

உலகளவில் சினிமாவில் மிகவும் உயரிய விருதாக கருதப்படுவது ஒஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஹாலிவுட் படங்களே அதிகளவில் ஆஸ்கர் விருதுகளை தட்டி செல்கிறது. இந்தியா சார்பிலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு படங்கள் பரிந்துரைக்கப்பட்டு வருகின்றன. இந்தாண்டு இந்தியா சார்பில் தமிழில் வெளியான வெற்றிமாறன் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தமிழ் படம் ஒன்று ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது பெரிய கவுரவம் என்றாலும், இந்த கவுரம் கிடைத்தது இது முதல்முறையல்ல, ஏற்கனவே 8 தமிழ் படங்கள், இந்தியா சார்பில் ஆஸ்கருக்கு பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது. அந்த படங்கள் எல்லாம் ...

Read More »

இசைக்குயில் எஸ்.ஜானகி ஓய்வு

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, கொங்கணி, துளு, ஒடியா, சவுராஷ்டிரா, ஜப்பான், ஜெர்மன் உள்ளிட்ட 15 மொழிகளில் பாடியுள்ள பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி தனது குழலினும் இனிய குரலுக்கு ஓய்வு கொடுத்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்தியாவின் புகழ் பெற்ற பின்னணிப் பாடகியான எஸ்.ஜானகி, 45 ஆயிரத்துக்கும் அதிகமான சினிமா மற்றும் பக்தி பாடல்களை பாடி ரசிகர்களுக்கு இசை விருந்து படைத்துள்ளார். பல பாடல்களைத் தாமே எழுதி, இசையமைத்துப் பாடியுள்ளார். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் பள்ளபட்லா என்ற ஊரில் ராமமூர்த்தி – சத்தியவதி ...

Read More »

நடிகை ஜியாகான் கொலை செய்யப்பட்டாரா?

பிரபல இந்தி நடிகை ஜியாகான். இவர் தமிழில் வெற்றிகரமாக ஓடிய ‘கஜினி’ படத்தை இந்தியில் மொழிமாற்றம் செய்த போது அதில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருந்தார். ஜியாகான் 2013-ல் திடீரென்று தூக்கில் பிணமாக தொங்கினார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது இந்தி நடிகர் சூரஜ் பஞ்சோலியும் ஜியாகானும் தீவிரமாக காதலித்ததும் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த மன வேதனையால் அவர் தூக்கில் தொங்கி உயிர் இழந்தார் என்றனர். வழக்கை விசாரித்த ...

Read More »

ஓஷோ வாழ்க்கை வரலாற்றில் நடிக்க மோகன்லால் ஆர்வம்

பிரபல சாமியார் ஓஷோ வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்க மோகன்லால் ஆர்வம் காட்டுகிறார். அவரை போன்ற தோற்றத்திலான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். செக்ஸ் வாழ்க்கையும் ஆன்மிகம் சாந்ததுதான் என்று சர்ச்சை கருத்துகளை சொல்லி பரபரப்பாக பேசப்பட்டவர் ரஜினீஸ் சாமியார். இவரை சீடர்கள் ஓஷோ என்று அழைக்கின்றனர். உலகம் முழுவதும் ஓஷோவுக்கு ஆசிரமங்களும் சீடர்களும் உள்ளனர். ஏராளமான ஆன்மிக புத்தகங்களையும் வெளியிட்டு உள்ளார். நடிகர்-நடிகைகள் பலர் இவரது ஆன்மிக கொள்கைகளில் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கனவே பல சாமியார்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டு உள்ளது. அதுபோல் ஓஷோவின் ...

Read More »

விஞ்ஞானியாக விரும்பும் யுவலட்சுமி

அப்பா, அம்மா கணக்கு படங்களில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர் யுவலட்சுமி. அதன் பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தும் தற்போது படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டார். தற்போது பிளஸ் 1 படித்து வரும் யுவலட்சுமிக்கு ஒரு விஞ்ஞானியாகி மக்களுக்கு பயன்படும் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை நிகழ்த்த வேண்டும் என்பதுதான் லட்சியமாம். காரைக்கால் தான் யுவலட்சுமியின் சொந்த ஊர். அப்பா பாண்டிச்சேரி அரசு பணியில் இருக்கிறார். 6 வயதிலிருந்து பரதநாட்டியம் கற்று வருகிறார். அதில் திறமையை காட்டி பல பரத நாட்டிய போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகளை ...

Read More »

சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் நாயகியானாள்

என்னது, சூர்யா-ஜோதிகாவின் செல்ல மகள் தியா அதற்குள் நாயகிஆகிவிட்டாரா என்று நினைக்க வேண்டாம். இது அவர்களின்சொந்த மகள் அல்ல திரைபடத்தில்  மகள். சில்லுன்னு ஒரு காதல் படத்தில் சூர்யா-ஜோதிகாவின் மகளாக நடித்த ஸ்ரியா சர்மாவை நினைவிருக்கிறதா? ஆம், அதே குட்டிப் பொண்ணு தான். அவர் தெலுங்கில்   நாயகியாகிவிட்டார்.அவர் நடித்த நிர்மலா கான்வென்ட் என்ற படம் கடந்த வெள்ளிக்கிழமை வெளியானது.

Read More »

விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும்

விக்னேஷ் மரணத்திற்கு பிறகாவது காவிரி தாய் எங்கள் பூமியை நனைக்கட்டும் என பாரதி ராஜா கூறியுள்ளார். கர்நாடக அரசை கண்டித்து சென்னையில் நடந்த கண்டன பேரணியில் மன்னார்குடியை சேர்ந்த விக்னேஷ் என்ற இளைஞர் தீக்குளித்தார். கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்னேஷ் இறப்பிற்கு இயக்குநர் பாரதி ராஜா இரங்கல் தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியுள்ளதன் சுருக்கம்:தமிழ் ஈழப் பிரச்னையில் தீக்குளித்த முத்துகுமார் தொடங்கி காஞ்சிபுரத்தில் தீக்குளித்த செங்கொடி, தற்போது காவிரி நிதி நீர் பிரச்னையில் தீக்குளித்த ...

Read More »

விலங்குகள் நல வாரிய தூதராக ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா

பிரபல நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யா. சினிமா துறையை சேர்ந்த இவர் விலங்குகள் நல வாரிய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து இந்திய விலங்குகள் நல வாரிய துணைத் தலைவர் எஸ்.சின்னி கிருஷ்ணா கூறும்போது, “நடிகர் ரஜினிகாந்தின் இளைய மகள் சவுந்தர்யாவை விலங்குகள் நல வாரிய உறுப்பினராக சேர்க்க பிற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர். இதன்படி, அவர் உறுப்பினராக சேர்க்கப்பட்டு, விலங்குகள் துணை குழுவில் உறுப்பினராக செயல்படுவார். இவரை விலங்குகள் நல வாரிய தூதராகவும் நாங்கள் நியமித்துள்ளோம். இவர் சினிமா துறையில் தீவிரமாக ...

Read More »

சினிமாவில் நடிக்க பெண்கள் பயப்பட தேவை இல்லை- அனுஷ்கா

சினிமா பாதுகாப்பான தொழிலாக இருக்கிறது. பெண்கள் தாராளமாக நடிக்க வரலாம். பயப்பட தேவை இல்லை என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார். நடிகை அனுஷ்கா அளித்த பேட்டி வருமாறு:-“சினிமாவில் பெண்கள் நடிக்க வருவது பற்றி சிலர் ஒரு மாதிரி பேசுகிறார்கள். அவர்களின் எண்ணமும் கருத்தும் என்னை ஆச்சரியப்படுத்துவதாக இருக்கிறது. அவர்கள் நினைப்பது போல் சினிமா மோசம் இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பான தொழிலாகவே இருக்கிறது. எனவே பெண்கள் நடிக்க வருவதற்கு பயப்பட வேண்டாம். நான் நடிகையாக அறிமுகமான ஆரம்ப கால கட்டத்தில் சினிமா பற்றி எதுவும் தெரியாது. ...

Read More »

நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது-கமல்

காவிரி நதி நீர் பிரச்சினை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். காவிரி நதி நீர் பங்கீடு பிரச்சினை தொடர்பாக கர்நாடகாவில் நடைபெற்று வரும் வன்முறை குறித்து பிரபல நடிகர் கமல் ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாவது:- நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது. நமக்குப் பின்னும் அது ஓடும்.  சரித்திரக் கண்ணாடியில் முகம் பாரத்து வெட்கப்பட நேரிடும்” என்று தெரிவித்துள்ளார்.

Read More »