திரைமுரசு

கல்வியின் அவசியத்தை உணர்த்தும் “சாயா “

இது பேய் படங்களின் சீசன். புதுமுக இயக்குனர்கள் ரூம் போட்டு விதவிதமான பேய் கதைகள் பற்றி யோசிக்கிறார்கள். பேய் அரசியலுக்கு மட்டும்தான் வரவில்லை. மற்ற எல்லாவற்றையும் பேய் செய்ய ஆரம்பித்து விட்டது. சாயா என்ற படத்தில் பேய் கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறதாம். இந்தப் படத்தில் புதுமுகம் சந்தோஷ் ஹீரோ, டூரிங் டாக்கீஸ் படத்தில் நடித்த காயத்ரி ஹீரோயின். இவர்கள் தவிர சோனியா அகர்வால் கவர்ச்சி போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஒய்.ஜி.மகேந்திரன், பாய்ஸ் ராஜன் உள்பட பலர் நடித்துள்ளனர். அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் சார்பில் ...

Read More »

‘சினிமா வீரன்’ ஆவணப் படம்-ஐஸ்வர்யா தனுஷ் திட்டம்

‘சினிமா வீரன்’ ஆவணப் படத்தை 3 பாகங்களாக உருவாக்க ஐஸ்வர்யா தனுஷ் திட்டமிட்டுள்ளார். ‘சினிமா வீரன்’ என்ற பெயரில் ஆவணப் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா தனுஷ். இதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். நடிகர் ரஜினிகாந்த் இப்படத்துக்கான வர்ணனையைக் (வாய்ஸ் ஓவர்) கொடுத்துள்ளார். தனுஷ் தயாரித்துள்ளார். முழுக்க சினிமாவில் பணியாற்றும் சண்டைப் பயிற்சியாளர்கள் பற்றிய ஆவணப் படம் இதுவாகும். “சினிமா வீரன், தமிழ் சினிமாவின் ஸ்டண்ட் கலைஞர்களுக்கு என்னுடைய அர்ப்பணிப்பு. அவர்கள் புகழப்படாத நிஜ நாயகர்கள்” என்று இப்படம் குறித்து ஐஸ்வர்யா தனுஷ் குறிப்பிட்டு ...

Read More »

தேவி- ஒரு முறை பார்க்கலாம்.!!!.

நடிகர் பிரபுதேவா நீண்ட இடைவேளைக்கு பிறகு, தமிழ் சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி, தயாரிக்கவும் செய்துள்ளார், இந்த தேவியை. விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் பணியாற்றியதுடன், ஏ.எல்.விஜய் இயக்கத்தில், இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளிவந்துள்ளது. தமன்னாவை சுற்றி தான் இப்படம் பெரிதும் நகரும் என “ட்ரைலர்” பார்க்கும் போதே தெரிந்தது, கோலிவுட்டே பேய் படத்தில் சிக்கிக்கொண்ட போது, ஏ.எல்.விஜய்யின் பேய் மிரட்டியதா? என்பதை பார்ப்போம். தமன்னாவை வேண்டா வெறுப்பாகத் திருமணம் செய்யும் பிரபு தேவா, மும்பையில் ஒரு அபார்ட்மெண்டுக்கு ...

Read More »

“வீர சாகசமாக சண்டை போடும் படங்களில் நடிக்க ஆசை”- காஜல் அகர்வால்

“வீர சாகசமாக சண்டை போடும் அதிரடியான கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க ஆசை” என்று நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார். நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து அளித்த பேட்டி வருமாறு:- “கதாநாயகிகள் மென்மையானவர்கள். அழகுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிப்பார்கள் என்று பலர் நினைக்கிறார்கள். அது தவறான கருத்து. கதாநாயகர்களுக்கு இணையாக கதாநாயகிகளாலும் முரடுத்தனமாக சண்டை போட்டு நடிக்க முடியும். கடந்த காலங்களில் பல நடிகைகளால் இது நிரூபிக்கப்பட்டு உள்ளது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிறது. ஆரம்பத்தில், கிடைத்த கதைகளில் நடித்தேன். காட்சிகள் ...

Read More »

தமிழ் உட்பட மூன்று மொழிகளில் புலிமுருகன்

மோகன்லால், கமாலினி முகர்ஜி, ஜகபதி பாபு, லால் நடித்த புலிமுருகன் படம் கடந்த 7ந் தேதி மலையாளத்தில் வெளிவந்து வரலாறு காணாத வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வசூல் சாதனையாக இருந்த த்ரிஷ்யம் படத்தையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை கசின்ஸ், விஷூதன், மல்லு சிங், சவுண்ட் தோமா படங்களை இயக்கிய வைஷாக் இயக்கி உள்ளார். வினு மோகன், சுராஜ், நமீதா, கிஷோர், நந்து என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. புலிவேட்டையை அடிப்படையாக கொண்ட கதை. சுமார் 25 கோடியில் தயாரிக்கப்பட்ட ...

Read More »

தமிழீழம் மலர்ந்தால் நாம் என்ன செய்வோம் ?

படம் தொடங்கி முடியும்வரை படத்தின் கதைக்குள் நம்மை ஈர்த்துவிடுகிறது ‘கூட்டாளி’ திரைப்படம். அடுத்தடுத்த காட்சி தொய்வின்றி விறுவிறுப்பாக நகரும் திரைக்கதை யுக்தியோடு அறிமுக இயக்குநர் திரு.நிரோஜன் இயக்கிய திரைப்படத்தை சி.சூரியகுமார் சிறப்பாக தயாரித்துக் கொடுத்திருக்கிறார்.

Read More »

திரையுலகில் விக்ரமின் 26 ஆண்டுகள்

தமிழ்த் திரையுலகில் நடிப்பிற்குகாக தன்னையே வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு நடிப்பால் பாராட்டப்படும் நடிகர்களில் விக்ரம் மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். 1990ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த என் காதல் கண்மணி ; படத்தின் மூலம் நாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகானார் விக்ரம். அடுத்தடுத்து ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் விக்ரமால் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக உயர முடியவில்லை. 1999ம் ஆண்டு கடைசியில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் ...

Read More »

சிவகார்த்திகேயன் அவுஸ்ரேலியா பயணம்

சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படம் பல்வேறு விமர்சனங்கள், கருத்துக்கள், தடைகளுக்கு இடையே நல்ல வரவேற்புடனும், வசூலுடனும் ஒடிக் கொண்டிருக்கிறது. வெளியிடப்பட்ட வெளிநாட்டிலும் நல்ல வசூலுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இதுவரை எந்த தமிழ் படமும் பெற்றிராத வெற்றியை ரெமோ பெற்றிருக்கிறது. இதற்காக அங்குள்ள தமிழ் அமைப்புகள் விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்து அதில் கலந்து கொள்ளுமாறு சிவகார்த்திகேயனுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இதை ஏற்று தற்போது சிவகார்த்திகேயன் அவுஸ்ரேலியாவுக்குச் சென்றுள்ளார். அவுஸ்ரேலியா சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியதும் மோகன் ...

Read More »

யுவன் இசையில் தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் இசையில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ். ‘கான்’ படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிக்க கெளதம் மேனன் மற்றும் மதன் தயாரித்து வருகிறார்கள். ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் பேய் படம் இது. முழுப்படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்காக நீண்ட ...

Read More »

என்னை இயக்குவது நகைச்சுவை! – நடிகை வினோதினி

எங்கேயும் எப்போதும்’படத்தில் தங்கையின் காதலை அங்கீகரிக்கும் அக்கா கதாபாத்திரத்தில் தொடங்கி, சமீபத்தில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் ஜூனியர் வக்கீலாக வந்து கவர்ந்தது வரை, பல வண்ணக் கதாபாத்திரங்களில் யதார்த்தக் கலைஞராக மிளிர்பவர் வினோதினி. இவரைத் திரைப்படக் கலைஞராகத் தெரிந்த அளவுக்கு தீவிர நாடகாசிரியராக, நாடக இயக்குநராக, நடிப்பைச் சொல்லித்தரும் ஆசிரியராகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி… நாடகம் வழியே திரைப்படத்துக்கு வந்தவர் நீங்கள் என்று தெரியும். அந்தப் பின்னணியைச் சுருக்கமாகச் சொல்லுங்கள். அதிக சுதந்திரம் தரும் ஒரு குடும்பத்தில் பிறந்து ...

Read More »