அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்திய துப்பாக்கி சூடு!

நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவம் குறித்து காவல் துறைக்குக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர். 32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார். காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ...

Read More »

மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர்!

பிரதமர் நரேந்திர மோடியுடன் செல்பி எடுத்துக்கொண்ட ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரில் ஜி 20 மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் ஒசாகா சென்றார். மாநாட்டின் முதல் நாளில் பிரதமர் மோடி, அமெரிக்கா,ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில், மாநாட்டின் இரண்டாவது நாளில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பிரதமர் மோடியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். அந்த புகைப்படத்தை ...

Read More »

அவுஸ்திரேலியப் பிரதமர் குறித்து முன்னரே கணித்திருந்த ட்ரம்ப்!

அவுஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison-இன் தேர்தல் வெற்றி குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தான் ஏற்கனவே கணித்துக்கொண்டதைப்போல அவர் வெற்றிபெற்றிபெற்றிருக்கிறார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். ஜி – 20 மாநாட்டுக்கு முன்னதாக அரசுத்தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார். அவுஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் Scott Morrison தலைமையிலான அரசு வெற்றிபெற்றது ஏனையவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம். ஆனால் தனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் Morrison வெற்றி பெறுவார் என்று தான் முன்னமே கணித்திருந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார். ...

Read More »

பிரியா செராயோ மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றார்!

மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ வென்றுள்ளார். ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார். இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார். இதுதொடர்பாக பிரியா கூறுகையில், எனக்கு இது முதல் அழகிப் போட்டி. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்குபெற்றது கிடையாது. மாடலிங் செய்ததும் கிடையாது. ...

Read More »

அவுஸ்திரேலியாலில் இருந்து சிறிலங்கா சென்ற தம்பதி கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கணவன், மனைவி தம்பதி ஒன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். கொலை சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவுஸ்திரேலியாவில் இருந்து நேற்றிரவு 11 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்த தம்பதியை குடிவரவு மற்றும் குடியகல்வு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக காவல் துறை ஊடகப் பேச்சாளரின் அலுவலகம் தெரிவித்துள்ளது. 46 தோட்டாக்களை வைத்திருந்த சம்பவம் தொடர்பாக கம்பஹா நீதவான் நீதிமன்றம் இவர்களுக்கு எதிரான பிடியாணை பிறப்பித்திருந்தது. அத்துடன் கைது செய்யப்பட்ட நபர், கடந்த 2018 ...

Read More »

அவுஸ்திரேலியா- தீவிபத்து! இரட்டை சகோதாரிகள் உட்பட 3 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திடீரென தீ பரவியமையினால் 3 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 11 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இரண்டு ஐந்து வயதான சகோதரிகள் இருவர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர். இந்த தீ பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. உயிரிழந்தவர்களில் இருவர் இரட்டை சகோதரிகள் என தெரியவந்துள்ளது. அதேநேரம் தீப்பரவலில் காயமடைந்த நிலையில் 8 வயதான சிறுமி ஒருவரும் 31 வயதான பெண் ஒருவரும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். சம்பவம் ...

Read More »

பாலியல் வல்லுறவை காரணம் காண்பித்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் பெண்கள்!

நவுறு தீவிலுள்ள பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் கருக்கலைப்பு ஆகியவற்றை காரணம் காண்பித்து அவுதிரேலியாவுக்கு வருவதற்கு முயற்சிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. உள்துறை அமைச்சர் Peter Dutton இதனை தெரிவித்துள்ளார். மனுஸ் மற்றும் நவுறு தீவிலுள்ள அகதிகளை மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு கொண்டுவருவதற்கு வகை செய்யும் சட்டத்தை மாற்றுவதற்காக லிபரல் அரசு மேற்கொண்டுவரும் முயற்சிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட Peter Dutton, இதனை குறிப்பிட்டுள்ளார். “மருத்துவ காரணங்களுக்காக அவுஸ்திரேலியாவுக்கு வரமுடியும் என்ற சட்டம் நடைமுறையிலிருக்கும்வரையில் அந்த சட்டத்திற்குள்ளேயும் அதைச்சுற்றியும் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற மனுஸ் – நவுறு ...

Read More »

ஆஸ்திரேலியா பயிற்சியாளரை வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், ஜாஸ் பட்லரை புதிய டோனி என கூறினார். இதனையடுத்து ஜஸ்டீனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா-பாகிஸ்தான் அணிகளை போல, இந்த இரு அணிகளும் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டீன் லாங்கர், இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் ஜாஸ் பட்லரை பாராட்டி பேசினார். அவர் கூறுகையில், ‘பட்லர் சிறந்த வீரர். அவரது பேட்டிங் எனக்கு மிகவும் ...

Read More »

அவுஸ்திரேலியாவில் அகதிபெண்களுக்கு தொடர்ந்து இறந்து பிறக்கும் குழந்தைகள்!

அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த மற்றும் அகதிப்பின்னணி கொண்ட பெண்களுக்கு கருக்கலைவு மற்றும் குழந்தைகள் இறந்து பிறப்பது அதிகரித்துள்ளது. இதற்கு அவர்களிடையே காணப்படுகின்ற மொழிப்பிரச்சினைதான் பிரதானமானது என்று Medical Journal of Australia தெரிவித்துள்ளது. மேலும் அகதிப் பின்னணிகொண்ட பெண்களின் வாழ்க்கை சித்திரவதை மற்றும் மன உளைச்சல் ஆகியவற்றுடனும் தொடர்புடையதாக இருக்கும்போது கர்ப்பகாலம் மிகக்கடினமானதாக காணப்படும். இதுவும் இன்னொரு பொதுவான பிரச்சினையாகியுள்ளது என்று Medical Journal of Australia சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ள பெண்களுக்கு ...

Read More »

சிட்னி விமான நிலையத்தில் திருடிய ஏர் இந்தியா அதிகாரி பணி நீக்கம்!

சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடையில் திருடியதாக குற்றம்சாட்டப்பட்ட உயரதிகாரியை ஏர் இந்தியா நிர்வாகம் பணியிடை நீக்கம் செய்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இருந்து நேற்று (22-ம் தேதி) காலை டெல்லிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தை ஓட்டும் விமானிகளில் ஒருவராக நியமிக்கப்பட்டிருந்த ரோஹித் பஷின் என்ற விமானி முன்னதாக சிட்னி விமான நிலையத்தில் உள்ள ஒரு கடைக்கு சென்றார். அங்கு இன்னொருவரின் பணப்பையை அவர் திருடி விட்டதாக ஆஸ்திரேலேசியா விமானச்சேவை நிறுவனத்தின் சார்பில் ஏர் இந்தியா அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டது. ...

Read More »