அவுஸ்திரேலியப் பிரதமர் குறித்து முன்னரே கணித்திருந்த ட்ரம்ப்!

அவுஸ்திரேலியப் பிரதமர் Scott Morrison-இன் தேர்தல் வெற்றி குறித்து தான் ஆச்சரியப்படவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தான் ஏற்கனவே கணித்துக்கொண்டதைப்போல அவர் வெற்றிபெற்றிபெற்றிருக்கிறார் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

ஜி – 20 மாநாட்டுக்கு முன்னதாக அரசுத்தலைவர்கள் கலந்துகொண்ட சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் Scott Morrison தலைமையிலான அரசு வெற்றிபெற்றது ஏனையவர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கலாம்.

ஆனால் தனக்கு ஆச்சரியமில்லை. ஏனெனில் Morrison வெற்றி பெறுவார் என்று தான் முன்னமே கணித்திருந்ததாக ட்ரம்ப் தெரிவித்திருக்கிறார்.

தான் நினைத்ததுபோலவே Morrison வெற்றிபெற்றதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.