மெல்போர்னில் நடைபெற்ற போட்டியில், மிஸ் ஆஸ்திரேலியா 2019 பட்டத்தை இந்தியப் பெண் பிரியா செராயோ வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நேற்றிரவு அழகிப் போட்டி நடைபெற்றது. இந்த அழகிப்போட்டியில் இந்தியப் பெண் பிரியா மிஸ் ஆஸ்திரேலியா 2019ஆக மகுடம் சூட்டப்பட்டார்.
இதைத்தொடர்ந்து, விரைவில் நடைபெற உள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகி போட்டிக்கு ஆஸ்திரேலியாவின் சார்பாக பங்கேற்க உள்ளார்.
இதுதொடர்பாக பிரியா கூறுகையில், எனக்கு இது முதல் அழகிப் போட்டி. இதற்கு முன் எந்த ஒரு போட்டியிலும் பங்குபெற்றது கிடையாது. மாடலிங் செய்ததும் கிடையாது. நான் அனுபவத்தின் ஒரு பகுதியாக இருக்க விரும்பினேன். போட்டியில் வென்று மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றது பெரிய ஆச்சரியம் அளிக்கிறது என தெரிவித்துள்ளார்.
சட்டம் படித்துள்ள பிரியா, மெல்போர்னில் மாநில அரசு ஒன்றில் வேலை வழங்கும் துறையில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Eelamurasu Australia Online News Portal