நபர் ஒருவரின் தலையில் துப்பாக்கியால் சுட்டமையினால் பதற்றமான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது. சிட்னி புறநகர் பகுதியில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் குறித்து காவல் துறைக்குக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. வழங்கப்பட்ட தகவலை அடுத்து இன்று மாலை 5.30 மணியளவில் Bonnyrigg உள்ள அவசர பொலிஸ் குழுவினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.
32 வயதான நபரின் தலையில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் இரத்த வெள்ளத்தில் காயத்துடன் அவர் மீட்கப்பட்டிருந்தார்.
காயமடைந்தவர் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் 60 வயதான நபர் கைது செய்யப்பட்ட நிலையில் காவல் துறை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Eelamurasu Australia Online News Portal