அவுஸ்திரேலியமுரசு

அவுஸ்திரேலியாவில் புதிய பரவல் ஆரம்பமானது எப்படி?

நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் தெரிவித்துள்ளார். பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கான வழியை தடுத்துவிட்டோம் என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார். நியுசவுத்வேல்ஸ் இரண்டுவிதமான பரவலை எதிர்கொள்கின்றது ...

Read More »

அகதிகளை இடமாற்றிய ஆஸ்திரேலிய அரசு

பப்பு நியூ கினியா மற்றும் நவுரு ஆகிய தீவுகளில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலிய கடல் கடந்த தடுப்பு முகாம்களிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 அகதிகள் வேறு ஹோட்டலுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம் அகதிகள் நல ஆர்வலர்களின் கடும் எதிர்ப்புக்கும் போராட்டத்துக்கும் மத்தியில் நடந்துள்ளது. மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு இந்த அகதிகள் சுமார் ஓராண்டாக தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹோட்டலிலேயே சிறைவைக்கப்பட்டிருந்தனர். முன்னதாக, இவர்களை அடையாளம் குறிப்பிடா இடத்திற்கு ...

Read More »

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைப்பு

ஆஸ்திரேலிய ஒபன் டென்னிஸ் போட்டி பிப்ரவரி மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8-ந் திகதி முதல் 28-ந் திகதி வரை இந்த போட்டி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன் ஆகிய 4 கிராண்ட்சிலாம் டென்னிஸ் போட்டிகள் நடைபெறும். கொரோனா வைரஸ் காரணமாக இந்த ஆண்டு 3 கிராண்ட்சிலாம் போட்டிகள் மட்டுமே நடந்தது. ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலிய ஓபனில் ஜோகோவிச் (செர்பியா), சோபியா (அமெரிக்கா) சாம்பியன் பட்டம் பெற்றனர். தள்ளிவைக்கப்பட்டு நடத்தப்பட்ட அமெரிக்க ஓபனில் ...

Read More »

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் தொடங்கியது- இந்தியா பேட்டிங்

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது. வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது. அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பகல் ...

Read More »

அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் மரணம்

ஈழத்தில் இருந்து  வந்து புகலிடம்கோரிய தமிழ் இளைஞர் ஒருவர் அவுஸ்திரேலியா பிரிஸ்பேர்னில் தற்கொலை செய்து மரணமடைந்துள்ளார். மட்டக்களப்பு, பட்டிருப்பு தொகுதி மண்டூரைச் சேர்ந்த கிசோபன் ரவிச்சந்திரன் என்ற 25 வயது இளைஞரே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பு தெரிவித்துள்ளது. 2012ம் ஆண்டு படகு மூலம் ஆஸ்திரேலியா வந்து சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ன் நகரங்களில் வாழ்ந்துவந்த கிசோபன், கடந்த டிசம்பர் 2ம் திகதி பிரிஸ்பேர்னில் வைத்து தனது உயிரை மாய்த்துக்கொண்டதாக கிசோபனின் நெருங்கிய நண்பரும் குயின்ஸ்லாந்து புலம்பெயர் தமிழர் அமைப்பைச் சேர்ந்தவருமான தயா ...

Read More »

அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொலை செய்கின்றன

மெல்பேர்னில் தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டுள்ளமை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொல்கின்றன என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. வருணிற்கு 18 வயது அவரின் முன்னாள் நீண்டகால முழுமையான வாழ்க்கை காத்திருந்தது, ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளே அவர் இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தின என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது. இந்த வருடம் மாத்திரம் 9 தமிழ் அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அறிகின்றோம் என தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் ...

Read More »

உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் – லாங்கர் தகவல்

உடல் தகுதியை எட்டினால் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் கேமரூன் கிரீன் விளையாடுவார் என ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியாவின் ஆல் ரவுண்டரான கேமரூன் கிரீன் இடம் பெற்று உள்ளார். இவர் இந்தியாவுக்கு எதிரான 2-வது பயிற்சி ஆட்டத்தில் (பகல்-இரவு) பந்து வீசிய போது பும்ரா அடித்த பந்து தலையில் தாக்கியது. இதனால் நிலை குலைந்த கேமரூன் கிரீன் தரையில் அமர்ந்தார். இதில் அவர் சிறிது அதிர்ச்சியான உணர்வு அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக நாளை மறுநாள் ...

Read More »

ஆஸ்திரேலியா: பல ஆண்டுகளுக்கு பின்பு விடுதலையான குர்து அகதி

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்த குர்து அகதியான பர்ஹத் பந்தேஷ் சுமார் ஏழரை ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் அவரது 40வது பிறந்தநாளில் விடுவிக்கப்பட்டுள்ளார். மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம், ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மந்த்ரா ஹோட்டல், இறுதியாக மெல்பேர்ன் குடிவரவு இடைத்தங்கல் முகாடும் என ஏழரை ஆண்டுகளாக சிறை வைக்கப்பட்டிருந்த பர்ஹத் பந்தேஷ்க்கு ஆஸ்திரேலிய அரசு தற்காலிக இணைப்பு விசா வழங்கி விடுவித்திருக்கிறது. “இதை என்னால் மறக்கவே முடியாது. இந்த விடுதலை எனது பிறந்த நாள் அன்று ...

Read More »

மெல்பேர்னில் தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் மரணம்

ஈழப்பின்னணி கொண்ட தமிழ் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவின் மெல்பேர்னில் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகம் தெரிவித்துள்ளது. வருண்ராஜ் ஞானேஸ்வரன் என்ற 18 வயதான இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்தார். தனது தாய் மற்றும் தங்கையுடன் படகு மூலம் வந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம்கோரிய வருண்ராஜ், Safe Haven Enterprise விசா (SHEV) கட்டுப்பாடுகளின்கீழ் Regional பகுதியான Sale என்ற இடத்தில் வாழ்ந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. ஆரம்பத்தில் மெல்பேர்னில் வாழ்ந்த வருண்ராஜ், Sale பகுதியில் குடியேறிய பின்னர் ...

Read More »

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம் பெறுகிறார்

அடிலெய்டில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான டே-நைட் போட்டிக்கான ஆஸ்திரேலியா அணியில் மார்கஸ் ஹாரிஸ் இடம்பெறுகிறார். ஆஸ்திரேலியா – இந்தியா அணிகளுக்கு இடையிலான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகிற 17-ந்தேதி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் அடிலெய்டில் பகல்-இரவு டெஸ்டாக நடக்கிறது. ஆஸ்திரேலியா அணியில் டேவிட் வார்னர், ஜோ பேர்ன்ஸ், மார்கஸ் ஹாரிஸ், வில் புகோவ்ஸ்கி ஆகிய நான்கு தொடக்க பேட்ஸ்மேன்கள் உள்ளனர். ஜோ பேர்ன்ஸ், டேவிட் வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிப்பார்கள் எனக் கருதப்பட்டது. ஆனால் ...

Read More »