மெல்பேர்னில் தமிழ் அகதி தற்கொலை செய்துகொண்டுள்ளமை அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் கொள்கைகள் அகதிகளை கொல்கின்றன என்பதற்கான மற்றுமொரு ஆதாரம் என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
வருணிற்கு 18 வயது அவரின் முன்னாள் நீண்டகால முழுமையான வாழ்க்கை காத்திருந்தது, ஆனால் அரசாங்கத்தின் கொள்கைகளே அவர் இனி தான் வாழ்வதில் அர்த்தமில்லை என்ற முடிவிற்கு வரும் நிலையை ஏற்படுத்தின என தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
இந்த வருடம் மாத்திரம் 9 தமிழ் அகதிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர் என அறிகின்றோம் என தமிழ் அகதிகள் பேரவையின் பேச்சாளர் அரன்மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரிஸ்பேர்னில் 25 வயது தமிழர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார் என குறிப்பிட்டுள்ள அவர்தற்போது இள்னுமொரு இள வயது நபரின் மரணம் நிகழ்ந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இவர் ஏனைய இளம் தமிழர்களை போன்று தற்காலிக விசாவில் இருந்தவர்- ஒவ்வொரு நாள் காலையிலும் கண்முழித்து தன்னால் எப்போது சாதாரண வாழ்க்கையை வாழமுடியும் என ஏங்கியவர் எனவும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
2012 ஒக்டோபரில் வருண் இந்தியாவிலிருந்து கிறிஸ்மஸ் தீவிற்கு வந்துசேர்ந்தார்,பல மாதங்கள் தடுப்பில் வைக்கப்பட்டிருந்த பின்னர் அவர் சமூகத்திற்குள் அனுமதிக்கப்பட்டார்.அவரது குடும்பத்தினர் இலங்கை இராணுவத்தினரால் அச்சுறுத்தப்பட்ட நிலையில் இந்தியாவிற்கு தப்பியோடியவர்கள் என அறிய முடிகின்றது எனவும் தமிழ் அகதிகள் பேரவை தெரிவித்துள்ளது.
வருணிற்கு 2018 இல் விசா வழ ங்கப்பட்டது இதன் காரணமாக அவுஸ்திரேலியாவில் அவரது நிலை நிச்சயமற்றதாக காணப்பட்டது எனவும் தமிழ் அகதிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
அவரது குடும்பத்தினர் தாங்கள் வசித்த டன்டெனொங் பகுதியிலிருந்து நண்பர்களை விட்டுவிட்டு வெளியேறி அரசாங்கத்தின் ஆதரவு இல்லாமல் பிராந்திய நகரமொன்றில் வாழவேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளானார்கள் எனவும் தமிழ் அகதிகள் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கையை சேர்ந்த அனைத்து புகலிடக்கோரிக்கையாளர்களையும் அகதிகள் பிரகடனத்தினை பொருட்படுத்தாமல் திருப்பிஅனுப்ப அரசாங்கம் விரும்புகின்றது என்ற உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டனின் நிலைப்பாட்டினை வருண் நன்கு அறிந்திருந்தாh எனவும் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.