இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து பயன்படுத்தும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடுகிறது.
வீராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டிக் கொண்ட ஒரு நாள் தொடரை ஆஸ்திரேலியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்திய அணி 20 ஓவர் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்றது.
அடுத்து இரு அணிகள் இடையே 4 டெஸ்ட் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி, பகல் இரவு ஆட்டமாக அடிலெய்டில் இன்று தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. துவக்க வீரர் பிருத்வி ஷா ரன்கள் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார்.அதன்பின்னர் மயங்க் அகர்வால், புஜாரா இருவரும் நிதானமாக விளையாடினர்.
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக பிங்க் பந்து (இளம் சிவப்பு) போட்டியில் ஆடுகிறது. அதாவது முதல் முறையாக பகல் இரவு டெஸ்டில் விளையாடுகிறது.
சிட்னியில் நடந்த பகல் இரவு பயிற்சி ஆட்டத்தை இந்திய வீரர்கள் சிறப்பாக பயன்படுத்திக் கொண்டனர். இதனால் இந்திய அணி நம்பிக்கையுடன் ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டு அதிக ரன்கள் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Eelamurasu Australia Online News Portal