அவுஸ்திரேலியாவில் புதிய பரவல் ஆரம்பமானது எப்படி?

நியுஸ்சவுத்வேல்சில் புதிதாக பரவிவரும் கொரோனா வைரசிற்கு காரணமான பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்க முடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக புதிய பரவல் குறித்த உண்மை அறியமுடியாத நிலை காணப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதான தொற்றாளரை அடையாளம் காணமுடியாத நிலை காரணமாக எதனையும் உறுதியாக தெரிவிக்க முடியாத நிலை காணப்படுவதாக நியுசவுத்வேல்சின் பிரதம வைத்திய அதிகாரி கெரி சன்ட் தெரிவித்துள்ளார்.

பிரதான தொற்றாளரை கண்டுபிடிக்காமல் கொரோனா பரவுவதற்கான வழியை தடுத்துவிட்டோம் என தெரிவிக்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நியுசவுத்வேல்ஸ் இரண்டுவிதமான பரவலை எதிர்கொள்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது வெளிநாட்டு பயணிகளிற்கு சேவை வழங்கிய பேருந்து சாரதி தொடர்பானது என குறிப்பிட்டுள்ள பிரதம வைத்திய அதிகாரி அவர் மூலம் வேறு பரவல்கள் இல்லை அவரது சகாக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

எனினும் சிட்னியின் வடபகுதி கடற்கரை தொற்றினால் 28 பேர் பாதிக்க்பட்டுள்ளனர் என கெரி சன்ட் தெரிவித்துள்ளார்.

இந்த கொத்தணி வேகமாக பரவியுள்ளது ஆனால் முக்கிய தொற்றாளர் யார் என்பது கண்டுபிடிக்கப்படாதது அதிகாரிகளை நெருக்கடிகளிற்குள் தள்ளியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்