அவுஸ்திரேலியாவின் மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களுக்கு கொண்டு செல்லப்படும் அகதிகள், அங்கு எத்தனை நாட்கள் தடுத்து வைக்கப்படுவார்கள் என்ற காலவரையறை தமது ஆட்சியில் நிர்ணயம் செய்யப்படாது என லேபர் கட்சி தலைவர் Bill Shorten கூறியுள்ளார். சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு வருபவர்களை மனுஸ் மற்றும் நவுறு அகதி முகாம்களில் தடுத்து வைப்பது என்ற திட்டத்தை முன்னாள் பிரதமர் கெவின் ரட் தலைமையிலான லேபர் கட்சி நடைமுறைப்படுத்தியிருந்தது. மேலும் அங்கு கொண்டு செல்லக் கூடிய அகதிகள் எந்த முடிவுமின்றி காலவரையறையற்ற நீடித்த தடுப்புக்காவலில் உள்ளனர். ஆக ...
Read More »அவுஸ்திரேலியமுரசு
அவுஸ்திரேலியாலில் 18 ஆண்டுகளுக்கு முன் தாய் எழுதிய கடிதத்தை முதல்முறையாக படித்த மகன்!
அவுஸ்திரேலியாவில் 18 ஆண்டுகளுக்கு முன்னர் புற்றுநோயால் தாய் உயிரிழந்த நிலையில் தனது மகனுக்கு கடைசியாக எழுதிய கடிதத்தை மகன் தற்போது முதல்முறையாக படித்துள்ளார். மெல்போர்னை சேர்ந்தவர் எம்மா. இவருக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்பென்சர் என்ற மகன் பிறந்தான். எம்மா கர்ப்பமாக இருக்கும் போதே அவருக்கு எலும்பு புற்றுநோய் இருந்தது, இந்நிலையில் ஸ்பென்சரை பெற்றெடுத்த பத்து மாதத்தில் எம்மா நோய் முற்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன்னர் தனது மகன் ஸ்பென்சருக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எம்மா எழுதியிருந்தார். ஸ்பென்சர் வளர்ந்து பெரியவனானதும் அவனிடம் கடிதத்தை ...
Read More »அவுஸ்திரேலியே வீரரின் சாதனை!
அவுஸ்திரேலியே வீரர் ஒருவர் உலகின் மிக உயர்ந்த எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை குறைந்த நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார். ஸ்டிவ் பிலைன் (steve plain) என்ற மலையேறும் வீரர் இந்த சாதனை புரிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை, அவர் 117 நாட்களில் அடைந்துள்ளார். போலந்து நாட்டு வீரர் 126 நாட்களில் எவரெஸ்ட் சிகரத்தை அடைந்ததே இதுவரை சாதனையாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Read More »NSW மாநில சாரதிகளுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இனித் தேவையில்லை!
NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், விரைவில் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமங்களை (drivers license) பெற இருக்கிறார்கள் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த சட்ட முன்வடிவு அடுத்த இரண்டு வாரங்களில் NSW நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டப்போ (Dubbo) நகரில் டிஜிட்டல் லைசன்ஸ் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி மாநிலம் முழுவதும் அதை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது. ஒருவரின் அடையாள அட்டையாகவும், ஆதார பத்திரமாகவும், Pubs மற்றும் Clubகளில் நுழைவதற்கும், காவல்துறையின் சாலைச் சோதனைகளுக்கும் டிஜிட்டல் லைசன்ஸ் ...
Read More »வடக்கு கிழக்கில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும்!
வடக்கு கிழக்கில் இடம்பெற்றுவரும் வன்முறைகளுக்கு எதிராக தொடர்ந்தும் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கருத்து தெரிவித்த காவல்துறை ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர இதனைக் குறிப்பிட்டார். வடக்கில் ஆவா குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் வன்முறைகள் தொடர்பில், அதிகளவானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவர்கள் அனைவரும் விசேட சுற்றிவளைப்பின் மூலம் கைது செய்யப்பட்டவர்கள் எனவும், தொடர்ந்தும் வன்முறைகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படும் எனவும் காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
Read More »60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய உத்தமர்!
60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் அவுஸ்திரேலிய செஞ்சிலுவை ரத்த தான சேவை அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார். இவருக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது. ஜேம்ஸ் ஹாரிசன் என்பவருக்கு 14 வயதில் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது, அவருடைய ரத்தத்தில் நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டிபாடி அதிகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர். இதன் மூலம் ஆண்டி D என்ற மருந்தை மேம்படுத்தி, பிரசவத்தின் போது ரத்தம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தைகளை ...
Read More »பெற்றோர்களை வரவழைக்க வேண்டுமாயின் ஆண்டு வருமானம் 45 ஆயிரத்து 185 டொலர் தேவை!
அவுஸ்திரேலியாவுக்கு வெளிநாடுகளிலிருந்து தங்களது பெற்றோர்களை வரவழைப்பதில் இருந்த சிக்கல் நிலைக்கு தீர்வு காண அரசு தீர்மானித்துள்ளது. நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தவல்ல நடைமுறை ஏப்ரல் முதலாம் திகதி அறிமுகம் செய்யப்பட்டிருந்த நிலையில் அதை ரத்து செய்ய அரசு தீர்மானித்துள்ளதாக தெரியவருகிறது. இதுவரை காலமும் தங்களது பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைக்க விரும்பும் கணவனும் மனைவியும் கூட்டாக, 45 ஆயிரத்து 185 டொலர்களை ஆண்டு வருமானமாக பெற வேண்டும். இந்த நடைமுறையை இந்த கூட்டுவருமான தொகையை ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 475 டொலர்களாக அரசு அதிகரித்திருந்தது. மேலும் தனி ...
Read More »அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு! குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலி!
அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குழந்தைகள் உட்பட ஏழு பேர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது, மேற்கு அஸ்திரேலியாவின் Margaret River, Osmington பகுதியில் இச்சம்பவம் அரங்கேறியுள்ளது. மேற்குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிலிருந்து 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. 4 சிறுவர்கள் மற்றும் 3 பெரியவர்களின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 5 மணியளவில் குறித்த வீட்டிற்குச் சென்ற பொலிஸார் 7 பேரின் உடல்களையும் இரு துப்பாக்கிகளையும் மீட்டுள்ளனர். இதேவேளை தாக்குதலுக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மேலும் தாக்குதல் நடாத்தியவர்களை பொலிசார் தேடி ...
Read More »புதிதாக குடியேறியவர்கள் அரச கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு 4 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்!
அவுஸ்திரேலியாவின் 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison 08 ஆம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்படி 2018-19 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையின் deficit- துண்டுவிழும் தொகை அல்லது பற்றாக்குறை 18.2 பில்லியன் டொலர்களாக உள்ளது. மேலும் 2019-20ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை 2.2 பில்லியன் டொலர்கள் surplus எனப்படும் உபரிநிதியுடன்கூடிய நிதிநிலை அறிக்கையாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை வெளியிடப்பட்ட நிதிநிலை அறிக்கையினால் பாதிக்கப்படும் தொகுதியினராக புதிதாக குடியேறியவர்களும் அகதிகளும் காணப்படுப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் புதிதாக குடியேறியவர்கள் newstart உள்ளிட்ட அரச ...
Read More »அவுஸ்திரேலியாவிற்குள் உள் நுழையும் வெளிநாட்டு மருத்துவர்களை குறைக்க தீர்மானம்!
அவுஸ்திரேலியாவிற்கு வந்து பணிபுரியும் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான இடங்களைக் குறைப்பதற்கு அவுஸ்திரேலிய அரசு தீர்மானித்துள்ளது. நேற்று (080 2018 ஆம் ஆண்டுக்குரிய நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Scott Morrison நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார். இதன்போது இந்த விடயம் குறித்து ஆராயப்பட்டது. அவுஸ்திரேலியாவில் இதுவரை ஆண்டொன்றுக்கு 2300 வெளிநாட்டு மருத்துவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் தங்கியிருந்து பணிபுரிவதற்கான விசா வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இதனை 2,100 ஆக குறைப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. மேற்குறித்த முடிவின் காரணமாக அடுத்த 4 ஆண்டுகளில் மெடிகெயார் ஊடாக 416 மில்லியன் டொலர்களை சேமிக்க முடியுமென ...
Read More »