NSW மாநிலத்தில் வாகனம் ஓட்டுபவர்கள், விரைவில் டிஜிட்டல் ஓட்டுனர் உரிமங்களை (drivers license) பெற இருக்கிறார்கள் என்று NSW அரசு அறிவித்துள்ளது. இது குறித்த சட்ட முன்வடிவு அடுத்த இரண்டு வாரங்களில் NSW நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும்.
கடந்த நவம்பர் மாதத்திலிருந்து டப்போ (Dubbo) நகரில் டிஜிட்டல் லைசன்ஸ் பரீட்சித்துப் பார்க்கப்பட்டதைத் தொடர்ந்து, இனி மாநிலம் முழுவதும் அதை அறிமுகம் செய்ய மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
ஒருவரின் அடையாள அட்டையாகவும், ஆதார பத்திரமாகவும், Pubs மற்றும் Clubகளில் நுழைவதற்கும், காவல்துறையின் சாலைச் சோதனைகளுக்கும் டிஜிட்டல் லைசன்ஸ் பயன்படுத்தப்படலாம்.
இந்த வகையான டிஜிட்டல் லைசன்ஸ், தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் கடந்த வருடமே அறிமுகம் செய்து விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.