60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய உத்தமர்!

60 ஆண்டுகளில் 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றியவர் அவுஸ்திரேலிய செஞ்சிலுவை ரத்த தான சேவை அமைப்பில் இருந்து ஓய்வு பெற்றார்.

இவருக்கு தங்கத்தினால் செய்யப்பட்ட கைக்கடிகாரம் நினைவுப் பரிசாக வழங்கப்பட்டது.

ஜேம்ஸ் ஹாரிசன் என்பவருக்கு 14 வயதில் நெஞ்சுப் பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

அப்போது, அவருடைய ரத்தத்தில் நோயை எதிர்த்துப் போராடும் ஆண்டிபாடி அதிகம் இருப்பதை மருத்துவர்கள் கண்டு பிடித்தனர்.

இதன் மூலம் ஆண்டி D என்ற மருந்தை மேம்படுத்தி, பிரசவத்தின் போது ரத்தம் சார்ந்த பிரச்சனைகளில் சிக்கி உயிருக்கு போராடும் குழந்தைகளை காப்பாற்ற முடியும் என்பதை ஹாரிசனுக்கு மருத்துவர்கள் எடுத்துரைத்தனர்.

இதனைத்தொடர்ந்து ரத்த தானம் வழங்குவதற்கு ஒப்புக் கொண்ட ஹாரிசன், செஞ்சுலுவை சங்கத்தில் இணைந்து வாரம் முறை ரத்த தானம் செய்து வந்தார்.

தற்போது அவருக்கு 81வயதாகும் நிலையில் சேவையில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.